டார்ஜிலிங்கில் அதிகளவு காணாமல் போகும் பெண் குழந்தைகள்! அதிர்ச்சி தகவல்

darglingchild_missing_001டார்ஜிலிங்கில் ஆண்டு தோறும் காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் ஒப்பிடும் போது, சுற்றுலாத் தளமான டார்ஜிலிங்கில் குழந்தைகள் காணாமல் போவது அதிகமாக இருப்பதாக அம்மாநில குற்றப்பதிவு ஆணையம் கண்டறிந்துள்ளது.

இங்கு சமீபகாலமாக காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. மேலும் மாயமாகும் குழந்தைகளில் அதிகமானோர் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

டார்ஜிலிங்கில் கடந்த 2012ம் ஆண்டில் மட்டும் 924 குழந்தைகள் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில குற்றப்பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது. இது 2010ம் ஆண்டில் 430 ஆக இருந்ததாகவும் புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.

தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள விவரத்தின் படி, மேற்கு வங்காளத்தில் கடந்தாண்டு சுமார் 19000க்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.

கணக்கில் வந்துள்ளது கொஞ்சம் தான், ஆனால் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்று சிஐஎன்ஐ அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் எல்லைப் பிரச்சினையால் நேபாளத்திற்குள் நுழையும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், கம்பெனிகள் மற்றும் வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் இதற்குக் காரணம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போகும் குழந்தைகளில் அதிகமானோர் பெண் குழந்தைகள் என்பதால் அவர்கள் வீட்டு வேலை மற்றும் பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

TAGS: