இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி அதிமுக நாடாளுமன்ற குழுவின் தலைவர் தம்பிதுரை, மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சதாசிவம் மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க ஐந்து அல்லது ஆறு மாதங்களாவது மிகவும் கவலை அளிக்கிறது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் கடல் எல்லையை மீனவர்கள் கண்டறியும் வசதி ஏற்படுத்தித் தர வாய்ப்பு உள்ளதா எனவும், இப்பிரச்னையை அரசியல் ரீதியாகவும், ராஜதந்திர முறையிலும் தீர்க்க வாய்ப்பு உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
யாருடா அவன் மத்திய அரசு? தமிழனை மதிக்க தெரியதவணுங்க? இதுதான் கடைசி எச்சரிக்கை!