பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் கெளரவ விருது, தமிழரான அஞ்சலி கோபாலனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்வுக்காகவும் அவர் ஆற்றி வரும் தொண்டுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை தில்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் இந்த விருதை அவருக்கு அளித்துப் பேசிய பிரான்ஸ் நாட்டின் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் நஜத் வால்லாத்-பேல்காசெம் கூறும்போது, “”அஞ்சலியின் சேவைகள் மிகவும் பாராட்டத்தக்கவை.
நியூயார்க்கில் சமூக சேவகராகத் தன் பணியைத் தொடங்கிய அஞ்சலி கோபாலன், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வந்திருந்தவர்களுக்கு சேவையாற்றி வந்தார்.
பின்பு இந்தியா திரும்பி அவர் தொடங்கிய நாஜ் அறக்கட்டளை திருநங்கையர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவந்தது” எனப் பாராட்டினார்.
அஞ்சலி கோபாலன் பேசும்போது, “”இந்த சேவைகளை நான் தொடர்ந்து செய்துவருவேன். விரைவில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான காப்பகம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.
பேசுவதைவிட செயலில் காட்டுகிறீர்கள். வாழ்த்துகள்!
இந்த விருது ..உண்மையில் தகுதி அடிப்படையில் வழங்க படுவதில்லை …அரசியல் சிபாரிசின் காரணமாக தான் வழங்க படுகின்றது