தமிழர் உணர்வை மதிக்க வேண்டும்: பிரதமருக்கு கருணாநிதி வேண்டுகோள்

dmk_karunanithiகாமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகச்சட்டப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இலங்கை தூதர் கரியவாசம் கருத்து தெரிவித்திருக்கிறார்.தமிழர்கள்அனைவரும் ஒன்றுபட்டு கடுமையாக எதிர்க்க வேண்டிய கருத்து இது.“காமன்வெல்த் மாநாட்டினை இந்தியாபுறக்கணித்தால், இந்தியா தனிமைப்படுத்தப்படும்” என்று இவர் டெல்லியிலே இருந்து கொண்டு கூறியிருக்கிறார்.

அது மாத்திரமல்ல; கரியவாசங்களுக்கு ஆதரவு தருவது போல நமதுமத்திய அமைச்சர்கள் சிலர் பேசி வருகிறார்கள். அதுவும் தமிழ்நாட்டைச் சேர்ந்தஅமைச்சர், சுதர்சன நாச்சியப்பன் “காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் தான் இலங்கையில் உள்ள தமிழர்களின் பொருளாதார நிலை மேம்படும்” என்றும், “தமிழகச் சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியல்ல” என்றும் கூறியிருப்பது ஈழத்தமிழர் பிரச்சினையில் அவர் கொண்டிருக்கும் தவறான அணுகுமுறையையே வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், “இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் மத்திய அரசு நல்ல முடிவெடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இந்த நிலையில்காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காவிட்டால் இந்தியா உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் என்று இந்தியாவுக்கான இலங்கைத் துhதர் கரியவாசம் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. உணர்வுப் பூர்வமான முக்கியபிரச்சினையில் இந்தியாவை மிரட்டும் வகையில் அவர் கருத்து தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.

ஒரு நாட்டின் தூதர் என்ற வரையறைக்குள் மட்டுமே அவர் கருத்து கூற வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இதே கருத்தினைத் தான் மத்திய அமைச்சர் நாராயணசாமி அவர்களும் வெளிப்படையாகக் கூறி அதுவும் ஏடுகளிலே வெளி வந்துள்ளது. மேலும் அவர், “இலங்கை காமன்வெல்த்மாநாட்டில் இந்தியா பங்கேற்பது தொடர்பான தமிழக மக்களின் உணர்வுகள்குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது” என்றும் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

இந்தியப் பிரதமர், டாக்டர் மன்மோகன் சிங் அவர்களே கடந்த வாரம் எனக்கு எழுதிய கடிதத்தில், “காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது பற்றி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உணர்வுகளையும், தமிழர்களின் உணர்வுகளையும் கருத்தில்கொண்டு அதன்படி செயல்படுவேன்” என்று தெரிவித்திருந்தார்.

இவ்வளவிற்கும் பிறகு, அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்,கரியவாசத்தைப் போல கருத்து தெரிவித்திருப்பது ஏற்கத் தக்கதல்ல.காமன்வெல்த் மாநாட்டினைப் புறக்கணிக்கப் போவதாக இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் மிகப் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டணி முடிவுசெய்துள்ள நிலையில்; இந்திய வெளியுறவுத் துறை திரு. சல்மான் குர்ஷித் காமன்வெல்த்மாநாட்டில் பங்கேற்கப் போவதாக அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும்,ஏமாற்றத்தையும் அளிக்கின்றது.

எனவே இந்தப் பிரச்சினை யில் மத்திய அரசு இனியும் தாமதம் செய்யாமல், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்காதுஎன்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிப்பதே சரியாக இருக்கும் என்பதையும்,பிரதமர் உடனடியாக அதற்கான அறிவிப்பினைச் செய்யும் படியும் வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: