இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் செல்லப்போவதாக வந்த அறிவிப்பினை அடுத்து விவசாயி ஒருவர் தீக்குளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகவுண்டம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெயபால் (43). இன்று காலை திடீரென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்.
அப்போது அவர் இலங்கைக்கு இந்தியாவின் சார்பில் யாரும் செல்லக் கூடாது என்றும் கிருஷ்ணகிரி கே.ஆர் அணையில் இருந்து திண்டல் வழியாக வரும் பாசனக் கால்வாயினை அரூர் வரை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பணியில் இருந்த பொலிசார் அவரைத்தடுத்து உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இப்போது தீக்குளித்து என்ன பயன்? நம்மவர்களை கொன்று குவித்த பொது ஏதாவது செய்து இருக்கவேண்டும்.அப்போது தூங்கிக்கொண்டு இருந்து விட்டு இப்போது ஆர்பாட்டம் தீக்குளிப்பு -எதற்கு என்றே புரிய வில்லை. அத்துடன் வடக்கதியன்கள் இது பற்றி அக்கறை கொள்வான்களா?