பாட்னா சம்பவத்திற்கும் கயா குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருக்கலாம்: புலனாய்வுத்துறை

bombblast_001பீகார் மாநிலம் பாட்னாவில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் நடந்த குண்டுவெடிப்புகளில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

80-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த குண்டுகளை வைத்தவர்கள், பீகார் மாநிலம் புத்த கயாவில் கடந்த ஜூலை மாதம் நடந்த குண்டுவெடிப்பிலும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பாதுகாப்பு அமைப்புகள் சந்தேகிக்கின்றன.

கவுகாத்தியில் மொத்தமாக வாங்கப்பட்ட கடிகாரங்கள், மீண்டும் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே, தற்போது கைது செய்யப்பட்டுளள் தவுசிம், இம்தியாஸ் ஆகியோருக்கு புத்த கயா குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கிறதா? என்பது பற்றி தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும் தெரிகிறது.

குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பீகார் மற்றும் அண்டை மாநிலமான ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில், வெடிபொருட்கள், பிரஷர் குக்கர், தீவிரவாத வாசகங்கள் அடங்கிய குறிப்புகள் கைப்பற்றப்பட்டன.

இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பினர் விரைந்துள்ளனர்.

TAGS: