உத்திரபிரதேச மாநிலம் உன்னாவோ நகரத்தில் இருக்கும் பழமையான கோட்டை தங்கப் புதையல் தேடுதல் வேட்டை முடிவடைந்துவிட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலேயர் இந்தியாவில் ஆட்சி செய்தபோது, உத்தரபிரதேசத்தில் உன்னாவ் மாவட்டம் அமைந்துள்ள பகுதியில், குறுநில மன்னராக இருந்தவர் ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங்.
இவர் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு 1857ம் ஆண்டு வீர மரணம் அடைந்தார். இவர் தாண்டியா கெராவில் உள்ள தனது கோட்டையில் 1,000 டன் தங்கத்தை புதைத்து வைத்துள்ளதாகவும், இத்தகவலை மன்னர் தன் கனவில் வந்து தெரிவித்ததாகவும் மத்திய அமைச்சர் சரண் தாஸ் மஹந்திடம் ஷோபன் சர்க்கார் என்ற துறவி கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அக்கோட்டையை தோண்டி பார்க்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி மத்திய அரசின், தொல்பொருள் ஆய்வு துறையினர் கடந்த 18 ம் திகதி முதல் கோட்டையை தோண்ட துவங்கினர்.
யாரோ ஒருவர் கனவு கண்டு கூறியதை நம்பி மத்திய அரசு இவ்வாறு புதையல் தோண்டுவது கேலிக்குரியது என பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் உன்னாவோ கோட்டையில் இத்தனை நாட்களும் அகழாய்வு செய்ததில், அங்கு தங்கப்புதையல் எதுவுமில்லை என தெரியவந்துள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சாமியாரின் ……………. கிடந்தது!!!
என்ன ஒரு அரசு, சாமியார் சொன்னாராம்! அரசு அதை நம்பி தேடுதல் வேட்டையில் இறங்குவது என்னவுறு மூடத்தனம்…. நீங்களெல்லாம் திருந்தவே மாட்டிங்களா?