ஒரே மேடையில் மன்மோகன் – மோடி

manmohansingh_narendramodiபிரதமர் மன்மோகன் சிங்கும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியும் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற, நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான மறைந்த சர்தார் வல்லபபாய் பட்டேல் அருங்காட்சியத் திறப்பு விழாவில் பங்கேற்றனர்.

அதில், பட்டேலின் தன்மைகளைக் குறிப்பிட்டு தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு இருவரும் காரசாரமாக உரையாற்றினர். மோடி ஆற்றிய உரையில், “நாட்டின் முதல் பிரதமராக சர்தார் வல்லபபாய் பட்டேல் இருந்திருந்தால் இந்தியாவின் தலைவிதியும், அடையாளமும் நிச்சயம் மாறியிருக்கும்.

இதை எண்ணி ஒவ்வொரு இந்தியனும் எண்ணி வருத்தப்படுகிறான். சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு ஒற்றுமை ஏற்பட வல்லபபாய் பட்டேல் அரும்பாடுபட்டார். ஆனால் தற்போது அந்த ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் பயங்கரவாதம் மற்றும் மாவோயிஸ்டுகளினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி, வல்லபபாய் பட்டேல் வாழ்ந்த நாட்டில் துப்பாக்கி, குண்டுகளை ஏந்தி வன்முறையில் ஈடுபடும் இளைஞர்கள் வெற்றி பெற இயலாது. அந்த இளைஞர்கள் தீவிரவாதத்தை விட்டு நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் திரும்ப வேண்டும் என்று மோடி கூறினார்.

அதைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், “முற்போக்கான சிந்தனையுடன், கொள்கைகள் உடையவர்களுக்கும் மரியாதை செலுத்தியவர் சர்தார் வல்லபபாய் பட்டேல் என்று புகழாரம் சூட்டினார். வல்லபபாய் பட்டேல், மதச்சார்பற்றவர் என்று அவர் குறிப்பிட்டார்.

மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, வல்லபபாய் பட்டேல், மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோர் கடைப்பிடித்து வந்த மதச்சார்பின்மை, முற்போக்கான சிந்தனை, ஏழைகள் மீது கரிசனம் ஆகியற்றில் தற்போது குறைபாடு உள்ளது என்பதை இங்கு உள்ள அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று பிரதமர் கூறினார்.

படேல் முதல் பிரதமராக இருந்திருக்க வேண்டும் – மோடி

மோடி ஆற்றிய துவக்க உரையாற்றில், “நாட்டின் முதல் பிரதமராக சர்தார் வல்லபபாய் படேல் இருந்திருந்தால் இந்தியாவின் தலைவிதியும், அடையாளமும் நிச்சயம் மாறியிருக்கும்.

சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு ஒற்றுமை ஏற்பட வல்லபபாய் படேல் அரும்பாடுபட்டார். ஆனால் தற்போது அந்த ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் பயங்கரவாதிகளாலும், மாவோயிஸ்டுகளினாலும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி, வல்லபபாய் படேல் வாழ்ந்த நாட்டில் துப்பாக்கி மற்றும் குண்டுகளை ஏந்தி வன்முறையில் ஈடுபடும் இளைஞர்கள் வெற்றி பெற இயலாது.

அவர்களின் தீவிரவாத செயல்களால் அவர்கள் சார்ந்திருக்கும் சமுதாயத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர். அந்த இளைஞர்கள் தீவிரவாதத்தை கை விட்டு நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் திரும்ப வேண்டும் என்று கூறினார்.

பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்று வரும் குஜராத்தைப் பாராட்டி மத்திய அரசு விருது அளித்து வருவதற்கு பிரதமருக்கு மோடி நன்றி தெரிவித்து கொண்டார்.

படேல் காங்கிரஸ்காரர், மதச்சார்பற்றவர் – பிரதமர்

மோடியைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய பிரதமர் மன்மோகன் சிங், “முற்போக்கான சிந்தனையுடன், மாற்றுக் கொள்கைகள் உடையவர்களுக்கும் மரியாதை செலுத்தியவர் சர்தார் வல்லபபாய் படேல். மதச்சார்பற்றவராக திகழ்ந்த அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த அவரது வாழ்நாள் முழுவதையும் செலவழித்தார். ஆனால் “காங்கிரஸ் கட்சியற்ற இந்தியா வேண்டும்’ என்று தற்போது பிரசாரம் நடைபெற்று வருகிறது.

மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோர் கடைபிடித்து வந்த மதச்சார்பின்மை, முற்போக்கு சிந்தனை, ஏழைகள் மீது கரிசனம் ஆகியற்றில் தற்போது குறைபாடு ஏற்பட்டுள்ளது என்பதை இங்கு உள்ள அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று பிரதமர் கூறினார்.

முன்னதாக உரையாற்றிய மோடி, “1919 ஆம் ஆண்டு ஆமதாபாத் நகராட்சியில் பெண்களுக்கு இடஒதுக்கீடு பெற்று தர வல்லபபாய் படேல் நடவடிக்கை எடுத்தார் என்று தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். “மோடி குறிப்பிட்ட 1919 ஆம் ஆண்டு தவறு என்றும் 1926 ஆம் ஆண்டு தான் இது நிகழ்ந்தது என்று மத்திய அமைச்சர் தின்சா பட்டேல் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

TAGS: