இலங்கையின் பொதுநலவாய மாநாட்டில் தாம பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
தம்மை நேற்று சந்தித்த மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி கே வாசனிடம் மன்மோகன் சிங் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழக மக்களின் உணர்வுகள் மற்றும் தமிழக சட்டசபையின் தீர்மானம் என்பவற்றை கருத்திற்கொண்டு தமது முடிவு எடுக்கப்படும் என்றும் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விரைவில் அதிகாரிகள் மட்ட கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களை இன்று அமைச்சர் ஜி கே வாசன் தெ ஹிந்து செய்திதாளுக்கு வெளியிட்டுள்ளார்.
Miss சிங்க் என்ன சொல்லுது?கடைசி நேரத்திலே சூனியக்காரி பேச்சை கேட்டுகிட்டு சிங்களவன் காலிலே போய் விழுவபோது?