“கிராமத்தின் அடையாளம் வௌவால்” வெடி வெடிக்காத மக்கள்

tree_001வௌவால்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக கிராம மக்கள் வெடி வெடித்து கொண்டாடுவதை தவிர்த்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள விஷார் என்ற கிராமத்தில் பீமேஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவியின் தாமரைக்குளம் அருகே 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலமரம் உள்ளது. இந்த மரத்தில் ஆயிரக்கணக்கான வெளவால்கள் வசித்து வருகின்றன.

இரவில் உலாவி விட்டு, பகலில் இம்மரத்தில் ஓய்வெடுக்கும் வெளவால் கூட்டங்களுடன் இம்மரத்தைப் பார்க்கும்போது, சடைமுடி சாமியார் எழுந்து நிற்பது போன்று காட்சி தருகிறது.

இதே போன்று மேலும் 2 மரங்கள் முன்பு இருந்துள்ளன. கடந்த பல நூறு ஆண்டுகளாகவே இங்கு வெளவால்கள் குடியிருந்து வருவதாக இக்கிராமவாசிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் பகலில் ஓய்வெடுக்கும் வெளவால்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்பதில் கிராம மக்கள் உறுதியுடன் இருந்து வருகின்றனர்.

மேலும் இந்த வெளவால்கள் தங்களது கிராமத்தின் அடையாளம் என்றும் போற்றி வருகின்றனர்.

இதனால் தீபாவளி மற்றும் கோயில் திருவிழா காலங்களில் இக்கிராம மக்கள் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை பயன்படுத்துவதை தலைமுறை, தலைமுறையாக தவிர்த்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

அதேவேளை சங்குசக்கரம், மத்தாப்பு உட்பட ஒளிரும் பட்டாசுகளை கொண்டு தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

TAGS: