தஞ்சையில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்ச்சியில், உலக தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
வரலாற்றுச் சிறப்பு மிக்க முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் திறப்பு நிகழ்ச்சி வருகிற 8ம் தேதி தொடங்கி, 3 நாட்கள், தஞ்சை, விளார் சாலையில் அமைந்துள்ள முத்துக்குமார் திடலில், பாலச்சந்திரன் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.
மூன்று நாள் நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்காக விளார் சாலையில் உள்ள நினைவு முற்றத்தின் அருகிலேயே பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து நிகழ்ச்சிகளும் இந்த பந்தலிலேயே நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கலந்து கொள்பவர்கள் தங்குவதற்குத் திருமண மண்டபங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வரும் 8 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறப்பு விழா தொடங்குகிறது. ஈழ கவிஞர் காசி ஆனந்தன் கொடியேற்றி வைக்கிறார். முனைவர் ம.நடராஜன் தலைமையில் நான் (பழ.நெடுமாறன்) திறந்து வைக்கிறேன். வைகோ, தா.பாண்டியன், பொன்.ராதாகிருஷ்ணன், இரா.இளவரசு, த.வெள்ளையன், சுப.உதயகுமார், தஞ்சை அ.ராமமூர்த்தி, பெ.மணியரசன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
மலேசிய துணை அமைச்சர் வேதமூர்த்தி வி.ஐ.டி.வேந்தர், ஜி.விசுவநாதன், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்ழக துணை வேந்தர் பொன்னவைக்கோ, விநாயகா மிஷன் பல்கலைக்கழக வேந்தர் சுண்முகசுந்தரம் ஆகியோர் நூல்களை வெளியீட்டு உரையாற்றுகிறார்கள்.
தொடர்ந்து நடைபெறவிருக்கின்ற மூன்று நாட்கள் நிகழ்ச்சிகளிலும் தமிழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
ஹிந்துதுவ வேடமூர்திக்கு இங்க என்ன வேலை