இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் சிறையில் இருந்தபோது மகாத்மா காந்தியினால் பயன்படுத்தப்பட்ட கை நெசவு ராட்டினம் பிரிட்டனில் இன்று 1.8 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ( 1.11 கோடி இந்திய ரூபாய்கள்) ஏலம் போனது.
இந்த ராட்டினமே காந்தியின் சுதேசி இயக்கக் குறியீடாகவும், மிகவும் உன்னதமான பொக்கிஷமாகவும் அனைவராலும் பார்க்கப்பட்டதாகும்.
1930 களின் முற்பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தனது போராட்டத்துக்காக பூனா சிறையில் வைக்கப்பட்டபோது, தனது உடைகளை நெய்வதற்காக காந்தி இந்தக் கைராட்டினத்தை பயன்படுத்தினார்.
காந்தியின் உயில் மற்றும் அரிதான சில கடிதங்கள் உட்பட அவரது சுமார் 60 அரும் பொருட்கள் ஏலத்துக்கு வந்துள்ளன.
இந்த கைராட்டினத்தை, காந்தி, அமெரிக்க கிறித்தவப் போதகரான, ரெவரண்ட் ப்ளாய்ட் ஏ.பபர் என்பவருக்கு 1935ல் கொடுத்தார். -BBC