இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் இந்திய விமானங்களை கண்காணிக்கும் ரேடார் நிலையம் ஒன்றை சீனா அமைத்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு அருகே உள்ள தவூலத்பெக்கில் தரையிறங்கும் இந்திய விமானங்களை கண்காணிக்க இந்த ரேடார் நிலையத்தை சீனா அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் தாங்கள் அமைத்தது வானிலை மையம் என்று சீனா விளக்கம் அளித்துள்ளது.
எனினும் ரேடார் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை இந்தியா கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 20ம் திகதி தவூலத்பெக் விமான தளத்தில் இந்தியா தனது ஹெர்குலக்ஸ் விமானத்தை நிறுத்தியதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.