கொளத்தூர் மணி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது

kolathurmaniஇரு தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணி, இன்று தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி, சேலத்தில் வருமான வரித்துறை அலுவலகம் முன் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி, முன்புறத்தை சேதப் படுத்தினர் திராவிடர் விடுதலைக் கழகத்தினர்.

அதன் பேரில் அதன் தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டார். இன்று அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.

TAGS: