இந்தியாவில் வெளிநாட்டு வங்கிகள் செயல்பட ரிசர்வ் வங்கி அனுமதி

reserve_bankஇந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி, வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் செயல்பட வாய்ப்புகளைத் திறந்துவிடும் புதிய விதிகளை அறிவித்திருக்கிறது.

இதன் மூலம் வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் கிளைகளைத் திறக்க மேலும் சுதந்திரம் தரப்படும். மேலும், அவை இந்திய நிதித்துறையை மேம்படுத்துவதில் மேலதிக பங்காற்ற முடியும் .

ஆனால் இவை செயல்பட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வங்கிகள் கொடுக்கும் கடனில், 40 சதவீதத்தை, முன்னுரிமை தரப்படும் துறைகள் என்று கூறப்படும் சிறு தொழில் துறை மற்றும் குறைந்த வருமானம் உடையவர்கள் போன்றவர்களுக்குத் தரவேண்டும்.

இந்த மாற்றங்கள் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநரான ரகுராம் ராஜன், நாட்டில் வளர்ச்சியை அதிகப்படுத்தும் முயற்சியில், நிதித்துறையை திறந்துவிட எடுக்கும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாகும். -BBC

TAGS: