வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதீர்: டில்லியில் தமிழக பா.ஜ.க, வேண்டுகோள்

pon-rathakrishnanதமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல், தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் மீறி, கொமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றால், அது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்கு சமமாக ஆகிவிடும் என்று, தமிழக, பா.ஜ.க, கூறியுள்ளது.

இலங்கையில், இம்மாதம் நடைபெற போகும், கொமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில், இந்தியா பங்கேற்க கூடாது என, வலியுறுத்தி, தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், தமிழக, பா.ஜ., குழு, டில்லி வந்துள்ளது.

தமிழக, பா.ஜ., தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர், லட்சுமணன் மற்றும் மூத்த தலைவர், இல.கணேசன் ஆகியோர் அடங்கிய இந்த குழு, நேற்று முன்தினம் இரவு, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்கையும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், சுஷ்மா சுவராஜையும், சந்தித்துப் பேசியது.

நேற்று, இந்தக் குழுவினர், நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கையில், 2009ல் நடைபெற்ற இறுதிப் போரின் போது, தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ராஜபக்சவுக்கு எந்த அளவுக்கு பங்கு இருந்ததோ, அதற்கு சமமான அளவில், மன்மோகன் சிங் அரசுக்கும் பங்கு இருந்தது. அந்த போரில், மன்மோகன் சிங் அரசும் கூட்டாளியாகத்தான் இருந்தது. கொமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்க கூடாது என, தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்பை உறுதி செய்யும் வகையில், தமிழக சட்டசபையில், ஒருமனதாக தீர்மானமும், நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்தனைக்கும் பிறகு, இந்தியா சார்பில், பிரதமர் மன்மோகன்சிங், இலங்கைக்கு சென்று, கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றால், அது தமிழக உணர்வுகளை, மதிக்காத நடவடிக்கையாக அமையும். மேலும், அது, வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவதற்கு, சமமாக ஆகிவிடும்.

இந்த கருத்துக்களை, ராஜ்நாத்சிங் மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகிய இருவரிடமும், எடுத்துக் கூறியுள்ளோம். எக்காரணம் கொண்டும், இலங்கைக்கு, பிரதமர் மன்மோகன் சிங் செல்வதற்கு, பா.ஜ., சார்பில், ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்கிட கூடாது என்று, வலியறுத்தியும் உள்ளோம்.

சில ஊடகங்களில் வந்துள்ள செய்திகளைப்போல, பா.ஜ.,வின் மத்திய தலைமையானது, பிரதமர், இலங்கை செல்வதற்கு, ஆதரவு ஏதும் வழங்கிடவில்லை. இன்னும், இறுதி முடிவு எடுக்காத நிலையில், அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும், தீவிர முயற்சிகளின் வாயிலாக, நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு, பா.ஜ.க, தலைவர்கள் கூறினர்.

TAGS: