10 இலட்சத்திற்காக தந்தையை சுட்டுக்கொன்ற மகன்

gun_shoot_001உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் கடந்த மாத தொடக்கத்தில் ஒரு பெண்ணை கேலி செய்தது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. பிறகு அது பெரும் மத கலவரமாக மாறியது.

இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கிக் கொண்டதில் 63 பேர் பலியானார்கள்.

முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் சூறையாடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிட்டது. அவர்களில் சுமார் 40 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

ராணுவத்தின் தீவிர ரோந்து காரணமாக தற்போது அந்த மாவட்டத்தில் அமைதி திரும்பியது. நீடித்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதையடுத்து கடந்த மாதம் 20ம் தேதி முதல் அங்கு இயல்புநிலை திரும்பியது.

கலவரம் நடந்த பகுதிகளுக்கு உத்தரபிரதேச முதல் மந்திரி அகிலேஷ் யாதவ்,பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்க ஆறுதல் கூறினர்.

கலவரத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு மாநில அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த இழப்பீட்டு தொகைக்கு ஆசைப்பட்டு முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை அவரது மகனே சுட்டுக் கொன்ற சம்பவம் தற்போது அம்பலமாகி உள்ளது.

முசாபர்நகர் கலவரத்தின் எதிரொலியாக சஹாரன்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 2ம் தேதி முன்னாள் ராணுவ வீரர் சந்திர பால்சிங் மற்றும் சவுரஜ் ஆகியோர் உடலில் குண்டுகள் பாய்ந்த நிலையில் பிணமாக கிடந்தனர். சந்திர பால்சிங்கின் மனைவி மற்றும் இளைய மகன் ஜோகேந்திரா ஆகியோர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த சிலர் அவர்களை கொன்று விட்டதாக கூறினர்.

பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக போலீசார் மற்றம் அரசு அதிகாரிகள் ஜோகேந்திராவிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

அப்போது, அரசு வழங்கு இழப்பீட்டு தொகை 10 லட்சம் ரூபாய் மற்றும் தந்தையின் இன்சூரன்ஸ் பணம் 15 லட்சம் ரூபாய் என மொத்தம் 25 லட்சம் ரூபாயை அடைய ஆசைப்பட்ட ஜோகேந்திரா பெற்ற தந்தையையே துடிக்கத் துடிக்க சுட்டுக் கொன்ற உண்மை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

TAGS: