அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நடிகை லட்சுமி மேனன், கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டிய நாடு என அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டு. பணமும் அவர் காட்டில் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. இதனால் அவர் முகத்தில் இருக்கும் சிறிய தழும்பு ஒன்றை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மறைக்க போகிறார் என்ற பேச்சு இருந்தது. அதனை மறுத்திருக்கிறார் லட்சுமி மேனன்.
“நான் அழகான பொண்ணு கிடையாது. பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கேன். அழகானவள்ங்கற திமிரும் கிடையாது, அழகு குறைவா இருக்கேங்கற தாழ்வு மனப்பான்மையும் கிடையாது. என் தோற்றத்துக்கு ஏற்ற கேரக்டர்களில் நடிக்கிறேன். அதில் முழு ஈடுபாட்டோடு நடிக்கிறேன். அதுதான் வெற்றிகளுக்கு காரணம். சிலபேர் நான் வெயிட் போட்டுவிட்டதா சொல்றாங்க. அப்படியேதான் இருக்கேன். சேலை கட்டினா வெயிட் போட்ட மாதிரி தெரியும். மற்ற டிரஸ் போட்டால் வெயிட் குறைஞ்ச மாதிரி தெரியும்.
முகத்தில் உள்ள தழும்பை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணப்போறதா சொல்றாங்களாம். அப்படி ஒரு எண்ணம் முதல் இருந்திச்சு. இப்போ அந்த ஐடியாவை விட்டுட்டேன். அந்த தழும்பு அழகா எக்ஸ்ட்ரா அட்ராக்ஷன்னு எல்லோரும் சொல்றாங்க.
பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சால், கன்னுக்கு பார்க்க ஜோக்கா இருக்கும்…!!!
லட்சமி மேனன் ! உங்க மாமா mohan rich சொல்வதை கேளுங்கள் !