இந்தியப் பெண்ணுக்கு ஐ.நா விருது

martha_chopra_001இந்தியாவை சேர்ந்த சமூக சேவகி மார்தா தோத்ரேக்கு ஐக்கிய நாடுகள் சபை, உலக தலைமை பண்பு விருது வழங்கி கௌரவித்தது.

ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் சமூகசேவைகளில் ஈடுபட்டவர்களுக்கு ஐ.நா உலக தலைமை பண்பு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் நியூயார்க்கில் நடைபெற்றது.

இதில் பீகாரை சேர்ந்த சமூக சேவகி மார்தா தோத்ரேக்கு “கொடிய நோய்களில் இருந்து குழந் தைகளை காக்க உறுதியாக செயல்பட்ட செயல் வீரர்கள்” என்ற தலைப்பில் விருது வழங்கப்பட்டது.

பீகாரில் குழந்தைகளைத் தாக்கும் போலியோ நோய் தாக்குதலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலை செய்ததற்காக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஹிந்தியில் பேசிய மார்தா, உலக அரங்கில் இந்த விருது பெறுவது இன்னும் உற்சாகமாக வேலை செய்ய ஊக்கமளிக்கிறது என்று குறிப்பிட்டார்.

இந்த விழாவில் பா.ஜ மூத்த தலைவர் சத்ருகன் சின்ஹா, ஐநா.வுக்கான ஆப்கன், பாகிஸ்தான் மற்றும் நைஜீரிய தூதர்கள், இந்திய பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

TAGS: