சவுதியில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

ramados01சவுதியில் வேலை இழந்து தவிக்கும் தமிழர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு  அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்லார். இதுற்குறித்து அவர் வெளியிட்ட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சவுதி அரேபியாவில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட நிதாகத் சட்டத்தால் அங்கு பணியாற்றி வந்த  இந்தியர்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர். நிதாகத் சட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டே கொண்டுவரப்பட்டாலும் அதை செயல்படுத்துவதற்கு கடந்த மார்ச்  27-ஆம் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டிருந்தது.

இந்திய அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க நிதாகத் சட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை சவுதி அரசு 7 மாதங்களுக்கு நீட்டித்திருந்தது. புதியக் காலக்கெடு கடந்த 3 ஆம் தேதியுடன் முடிந்து விட்ட நிலையில், இதுவரை பணி உரிமம் புதுப்பிக்காமலும், புதிய வேலை வாய்ப்புகளைத் தேடிக் கொள்ளாமலும் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை கடந்த சில நாட்களாக சவுதி அரேபிய அரசு தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில் சவுதியில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடையக்கூடும் என்பதால் அங்கு தவிக்கும் தமிழர்களை  மீட்டுவரத் தேவையான நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிடுள்ள அறிக்கையில் சவுதியிலிருந்து ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் தமிழகம் திரும்புவதால் ஏற்கனவே நிலவும் வேலைவாய்பின்மையும், வறுமையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

கேரளாவில் இவ்வாறு தாயகம் திரும்பியவர்களுக்கு சலுகைகளுடன் கூடிய கடன்களும், ரூ. 2 லட்சம் வரை மானியமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும், சவுதியில் இருந்து திரும்பியோரின் மறுவாழ்வுக்காக இது போன்ற கடன் மற்றும் நிதி உதவித் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

TAGS: