மோடி செல்வாக்கை எட்டிப்பார்க்கும் அமெரிக்கா

ndra_modi_002நரேந்திர மோடியின் செல்வாக்கை அறிந்துகொள்ள அமெரிக்கா தனது கவனத்தை செலுத்தியுள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தை அடுத்து மோடி மீது அமெரிக்கா கடும் வெறுப்பு கொண்டிருந்தது. மதவாதி மோடி என்றெல்லாம் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.

மேலும் மோடிக்கு எந்த வகையிலும் விசா அளிக்க கூடாது என்று எம்பிக்கள் பலரும் குரல் எழுப்பினர்.

ஆனால் அடுத்தாண்டு பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிலைப்படுத்தப்பட்டபின் பாஜவின் செல்வாக்கு சற்று அதிகரிக்க ஆரம்பித்து விட்டது என்று பிரச்சாரங்கள் விளைவாக அமெரிக்காவும் சற்று கவனத்தை திருப்ப துவங்கி உள்ளது.

சமீபத்தில் மோடி பற்றி அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், மோடி பிரதமராக அமரும் போது அமெரிக்கா கண்டிப்பாக வரவேற்கும். யார் பிரதமராக வந்தாலும் இந்தியாவுடனான நட்பு அமெரிக்காவுக்கு எப்போதும் முன்னுரிமை படைத்தது தான் என்றும் இதில் கேள்விக்கே இடமில்லை எனவும் கூறியுள்ளனர்.

TAGS: