இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை கோரி இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பான டெசோ கோரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கும் கருத்துக்களையும், உலகத் தமிழர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு, இப்போதாவது மத்திய அரசு அத்தகையதொரு தீர்மானத்தினை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவேண்டும் எனக்கோரி இன்று ஞாயிறு சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கூடிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், ‘தமிழர்களின் ஒருமித்த உணர்வுகளைப் புறக்கணித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான ஒரு குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும், தமிழர்களுக்கெதிராகச் செயல்படும் மஹிந்த இராஜபக்சே அரசுக்கு தோள் கொடுத்துத் தூக்கி நிறுத்தவதாகும்’ என்றும் டெசோ மத்திய அரசைக் கண்டித்திருக்கிறது.
‘இங்கிலாந்து நாட்டின் பிரதமர் டேவிட் கேமரன் ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளை நேரில் சுற்றிப் பார்த்து அங்குள்ள தமிழ் மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு, இலங்கை அரசு வருகிற மார்ச் மாதத்திற்குள், தங்களுடைய விசாரணையை முடிக்கவில்லையென்றால், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து ஒரு நம்பகத் தன்மை வாய்ந்த, சுதந்திரமான சர்வதேச விசாரணை நடைபெற ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தின் மூலமாக நடவடிக்கை மேற்கொள்வோம் என எச்சரித்திருப்பதற்காக’ அவரைப் பாராட்டியும், அவரது அணுகுமுறை புதிய நம்பிக்கையை அளிப்பதாகவும் கூறும் தீர்மானம் ஒன்றும் இன்று டெசோவால் நிறைவேற்றப்பட்டது.
‘தனி ஈழத்திற்காக பொது வாக்கெடுப்பு என்பதே டெசோவின் நிலைப்பாடாக இருந்தாலும், இலங்கையில் 13வது சட்டத்திருத்தம் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்து வரும் நிலையில் இடைக்கால நிவாரணமாக வடக்கு, கிழக்கு மாகாண அரசுகளுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட, இந்திய உதவியுடன் நிறைவேற்றப்படும் திட்டங்களின் முழுப்பயனும் ஈழத் தமிழர்களை சென்றடைய, தேவையான முன்முயற்சிகளில் மன்மோகன்சிங் அரசு இறங்கவேண்டும்’ எனவும் இன்று கோரப்பட்டது.
தஞ்சையில் அமைக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்ததற்காக தமிழக அரசிற்கும் டெசோ கண்டனம் தெரிவித்தது. -BBC
என்னமா வீரம் கொப்பளிக்குது திருடர்கள் முன்னேற்ற கழக தலைவர் திரு(ட்டு) கருமாதி அவர்களுக்கு! இவ்வளவு நாள் எதை புடுங்கி கொண்டு இருந்தீர்கள் தலைவா? நீர் அல்லவா தமிழ் நாட்டை காக்கும் முதல்வன்!
நல்ல ஜால்ரா அடிக்கும் கழகம் இந்த கழகம். கருணாநிதி ஔர் ஊளை இடும் நரி . தேர்தல் நேரத்தில் ஜால்ராவை வேறு கட்சிக்கு அடிக்கும் வல்லவன் இந்த நயவஞ்சகன்.
உங்கக்கா புருஷன் மாமாவை வையாதே . உன் அக்காவுக்கு கோவில் கட்டு , அவரை அடைந்ததற்கு . அவரும் ஒரு மாமேதையே ?
கருணாநிதி கயவா ….கூட்டம் . கடந்த 30 ஆண்டுகளாக 3 லச்சம் எங்கள் தமிழர்களை கொன்ற ராஜபக்சே கொலை காரன முதல தள்ளனும் அப்புறம் உன்னை தள்ளனும் . திராணி இருந்தா ஸ்ரீ லங்கா தூதர தமிழ் நாட்டில் இருந்து தூக்குங்கடா! பிறகு அரசியல் TESO துப்புகெட்ட கூட்டத்த குடி முழுங்குகடா !
நாடக நடிகரே…சுயநல அரசியல் கொள்ளைக் கூட்டத் தலைவரே…கலர் மாறும் கயவரே… இவர் ஆட்சியிலேதான் இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தார்களே…இப்போ என்ன பேச்சு…நீர் அறிக்கை விடாமல் இருந்தாலே தமிழன் உயிரோடு வாழ்வான்
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் இருக்கும் தமிழர்களின் மீது பற்று ,கருணாநிதி உனக்கு கொஞ்சம் கூட இல்லே .குடும்ப அரசியல் நடத்தி பணம் பண்ணினாய் .பல காவியங்கள் கொடுத்தாய்.ஆனால் தனி ஈழத்திற்காக என்னே செய்தாய்.எல்லாம் முடிந்தபிறகு இப்பொழுது பிதட்டுருகிறாய்!!!உனக்கும் சரித்திரம் எழுதபட்டுவிட்டது எட்டப்பன்.உனது வம்சம் என்று.