கமரூனின் சேவையை மறுக்க முடியாது: இந்திய மத்திய அமைச்சர் ஜீ.கே.வாசன்

g_k_vasan_001பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் கமரூனின் இலங்கை தொடர்பான முன்னெடுப்புகள் மகிழ்ச்சியளிப்பதாக இந்திய மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜீ.கே. வாசன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

கமரூன் இலங்கையில் தங்கியிருந்த இரண்டு நாட்களில், சாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டதை, எவராலும் மறுக்க முடியாது என்றும் வாசன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஸித், இலங்கை தமிழர் பிரச்சினை விடயத்தில் கொழும்பு பொதுநலவாய மாநாட்டின் போது காத்திரமான பங்கை வகித்திருக்கலாம் என்றும் வாசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகளுக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் யோசனை தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என டெசோ மாநாடு வலியுறுத்தி வருவதை அமைச்சர் வாசன் நிராகரித்துள்ளார்.

TAGS: