திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பழ.நெடுமாறனை சந்திக்க சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர் 1½ மணி நேரம் சிறைவாசலில் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பினார்.
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியான பூங்கா மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவை ஆக்கிரமிப்பு இடத்தில் இருப்பதாக கூறி நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் இடித்து அகற்றினர்.
அதிகாரிகளின் நடவடிக்கையை தடுக்க முயன்ற தமிழர் தேசிய இயக்கம் கட்சி தலைவர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் சத்தியமூர்த்தி, நல்லதுரை உள்பட 83 பேரை பொலிஸார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
பழ.நெடுமாறனை சந்தித்து பேசுவதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மனைவியுடன் நேற்று செவ்வாய்க்கிழமை திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு சென்றார்.
சிறை விதிமுறைப்படி பொதுவாக செவ்வாய்க்கிழமை அன்று, விசாரணை கைதிகள் யாரையும் வெளியாட்கள் பார்ப்பதற்கு அனுமதி கிடையாது என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறி அனுமதி மறுத்தனர்.
சிறப்பு அனுமதி பெறுவதற்காக வழக்கறிஞர்கள் எடுத்த முயற்சியும் தோல்வி அடைந்தது. சீமான் கொண்டு சென்ற பழங்களும் உள்ளே கொடுக்க அனுமதிக்கப்படவில்லை.
இதனால் சிறை வாசலில் சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்த சீமான் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
இதுபற்றி சீமான் நிருபர்களிடம் கூறுகையில்,
உயர் அதிகாரிகளிடம் பேசியபோது பார்க்கலாம் வாருங்கள் என்றனர். அதன் அடிப்படையில் தான் வந்தோம். ஆனால் இப்போது அனுமதி மறுக்கப்படுகிறது. பொதுவாக எங்கள் விஷயத்தில் பொலிஸார் எப்போதுமே மிகவும் நேர்மையாகவே நடந்து கொள்வார்கள். இப்போதும் அது தான் நடந்து உள்ளது என்றார்.
தம்பி சீமான்… நாம் தமிழர் தலைவரே ..தலைவர் பழ நெடுமாறன் அய்யா அவர்களுக்கு இதுவெல்லாம் பாயசம் போல.. அவர் மீண்டு வென்று வருவார்.டாக்டர உள்ளே அனுப்பி அவர் உடல் நலம் பேண பார்க்கவும் அவர் நமக்கு கண்டிப்பா வேண்டும். மலேசித தமிழர்கள் அவர் வளம் ,நலம், பலம் பெற்று திரும்ப பிரார்திக்கிறோம்.
இதுவேளை உலகத தமிழர்கள் சோக மாநாட்டின் தாக்கத்தில் உள்ளோம் தமிழகத்தில் உலக அளவு ஒரு எதிர்ப்பு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யல்லாம். நாங்கள் 100 பேர் வர திட்டம் உள்ளது.
தமிழகத்தில் இந்த எதிர்ப்பு சோகம் தலைவர்களை நோக்கி இருத்தல் அவசியம். ப்ரிடிஷார் நமக்கு ஆதாரவாக இருக்கையில் நமது நகர்வு சரியாக இருக்கும். நன்றி.தமிழா !
ம.பொன் ரங்கன்.
உலகத தமிழர் தேசியம் மலேசியா
/நாம் தமிழர் மலேசியா.