கண்டம் பாய்ந்து தாக்கும் தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி

dhanush_missile_001அணுஆயுதங்களை தாங்கிச் சென்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் “தனுஷ்’ ஏவுகணை சோதனையை இந்தியா சனிக்கிழமை வெற்றிகரமாக நடத்தியது.

ஒடிசா மாநிலம் சண்டிப்பூர் கடற்பகுதியில் இந்தியக் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து இந்த ஏவுகணை சனிக்கிழமை காலை 11.10 மணிக்கு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த ஏவுகணை 500 முதல் 1000 கிலோ வரை எடையுள்ள அணுஆயுதங்களை எடுத்துச் சென்று கடல் வழியாகவும், தரை வழியாகவும் தாக்கக்கூடிய சக்தி வாய்ந்தது.

இந்திய ராணுவத் தளவாடங்கள் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) இந்த ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS: