இந்துத்துவா கட்சி என வர்ணிக்கப்படும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை முன்னிறுத்தியுள்ளது அக்கட்சி தலைமை.
குஜராத் கலவரத்தின் போது இஸ்லாமியர்களை கொத்து கொத்தாக கொல்ல உத்தரவிட்டவர் என்ற குற்றச்சாட்டு மோடி மீது உள்ளது. இஸ்லாமிய இயக்கங்கள் மோடியை விமர்சித்து வருகின்றன. இஸ்லா மிய இயக்கங்கள் மட்டுமல்ல அரசியல் கட்சிகளும் மோடி மீது குற்றம்சாட்டுகின்றன.
இப்படிப்பட்ட நிலையில், இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் வேலூர் மாவட்டம், ஆம்பூரில் 300க்கும் மேற் பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் இன்று 23.11.13ந்தேதி நடந்த விழாவில் தங்களை பி.ஜே.பியில் இணைத்துக் கொண்டுள்ளனர்.
இது, ஆம்பூர் இஸ்லாமிய மக்களை மட்டுமல்ல, மற்றவர்களை ஆச்சர்யத்தோடு பார்க்க வைத்துள்ளது. பரபரப்பாக பேசப்படுகிறது.
அந்த 300 இஸ்லாமிய அன்பர்கள் எடுத்த முடிவு ஒரு பாராட்டுக்குரிய விஷயம் என்றுதான் சொல்லவேண்டும். இந்தியா ஒரு ஹிந்து பெருத்த நாடு. இது முஸ்லிம் மக்கள் உணர வேண்டும். முஸ்லிம் நாடுகளில் ஹிந்துக்கள் இஷ்டம்போல் எதையும் செய்யமுடியாது. ஆனால் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள்.
இந்தியாவில் வாழும் ஹிந்துக்கள் இன்னும் தூங்க்கிகொண்டிருக்கிரார்கல்.
இந்திய அரசியலை தூக்கிப் பேசுவதில் அல்லது தாழ்த்திப் பேசுவதில் எந்த ஒரு பிரயோசனமும் இல்லை. அங்கே அரசியல் என்பதே ஒரு கபட நாடகம்! இன்று ப.ஜ.க.-வில் சேர்ந்த அதே 300 பேர் நாளைக்கு இன்னோர் கட்சிக்காரன் தாலா Rs.500/= கொடுத்தால் சொல்லாமலே கட்சி மாறிவிடுவான். அத்தகைய அரசியல் சாணக்கியர்கள் இந்திய மக்கள்.
மத கலவரங்களை தடுக்க இது கூட நல்ல வழி !
இது ஒரு பொய்யான செய்தி, இந்த செய்தியின் உண்மை தன்மையை பத்திரிக்கை ஆசிரியர் உறுதி படுத்துவாரா?
மதசார்பற்ற போர்வைகளை சுமந்து பிரித்தாளும் நிலைகள் இன்னும் எத்தனைக்காலம் ,நம்புவோம் அனைத்தும் நன்மைக்கே என்று ,ஒன்றுபட்ட மதங்களாய் மாறுவோம் என்று கூறினோம் ,ஜாதிகள் அடிப்படை கருத்துக்கள் வந்தது ,காத்திருந்தோம் நியங்கள் வருமென்று ,பால் தினகரன் அவர்கள் , சந்துப்பும் நடந்தேறியது,ஒன்றுபட்ட மதங்களாய் இணைவுகள் நடக்கின்றது ,மாறுகின்றது மதசார்பற்ற நாடகங்கள் ,இணைந்தோம் நாங்கள் ,இனம் சார்ந்த கொள்கையில் ,நடந்தது இரயில் மறிப்பு போராட்டம் ,அடைக்கப்பட்டோம் மண்டபத்தில் ,கடவுள் மறுக்கும் பெரியார் திராவிட கழகமும் ,இந்து தத்துவா கொள்கை கடைபிடிக்கும் இந்து மக்கள் கட்சியும் ,இஸ்லாமிய மனிதநேய மக்கள் கட்சியும் கூட்டமைப்பாக அடைக்கப்பட்டோம் .இனம் காக்க ,,இரு கட்சியின் சகோதரர்கள் ,இருபுறம் அருகில் தொழுகைகள் நடத்தப்பட்டது இருநேரம் இது நடந்தேறியது கோவை மாநகரில் ,சரித்திரம் கிடையா ,சரித்திரம் மாறியது இனம் காக்க இணைந்தோம் ஒன்று பட்ட மதங்களாய் ,இணைப்போம் நம்மை, ஒன்றுபட்ட மதங்களாய் மாறுவோம் ,மாறட்டும் சிந்தனைகளும் ,சித்தாந்தங்களும் ,மனித நேயங்கள் மலரட்டும் ,நேசங்கள் பிறக்கட்டும் , சகோதரதத்துவமாக ,இணைவோம் ,இணைவோம் ,இணைவோம் .
காங்கிரஸ்,பிஜேபி ஒரே உள்நோக்கம் தமிழ் நாட்டை பிரித்து ஆள்வது,இது அனைவரும் அறிந்ததே! மொழி,இனம் நம்மை ஒன்று சேர்க்கும்!