ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எழுந்துள்ள பிரச்சினையில் இனியாவது முழு விசாரணை நடத்தி இத்தனை ஆண்டுகள் சிறையிலே தன் இளம் பிராயத்தை செலவிட்ட பேரறிவாளனுக்கு நியாயத்தை வழங்கிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி – பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கேள்வி:– ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் வாக்குமூலத்தை மாற்றம் செய்ததாக இந்த வழக்கை புலன் விசாரணை செய்த முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் 22 ஆண்டுகளுக்கு பிறகு ஒப்புதல் அளித்திருப்பதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?
பதில்:– சில குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்பது தான் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நெறியாகும்.
அந்த அடிப்படையில் தற்போது வெளியாகியுள்ள இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை ஏடுகளில் காணும் போது, நடந்து முடிந்த வழக்கு விசாரணையிலும், அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பிலும் மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது.
எனவே இனியாவது இதைப்பற்றி முழு விசாரணை நடத்திட அரசு முன்வர வேண்டும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இத்தனை ஆண்டுகள் சிறையிலே தன் இளம் பிராயத்தைச் செலவிட்ட பேரறிவாளனுக்கு நியாயத்தை வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.
பேரறிவாளனை உடனே நீதி மன்றம் விடுதலை செய்யவேண்டும்.
தமிழக கட்சிகள் ஒன்று சேர்ந்து குரல் கொடுங்கள்; அப்போதாவது
அந்த ‘இத்தாலி’ நாடுக்காரிக்கு உரைக்கட்டும்!! இல்லையேல்
பொதுத் தேர்தலில் அவளுடைய கட்சியை தமிழகத்தில் தரை
மட்டமாக்கி விடுங்கள்… வடக்கிலும் வீழ்ந்து போவாள்…