‘முள்ளிவாய்க்காலோடு முடிந்தது தி.மு.க.! முள்ளிவாய்க்கால் முற்றத்தோடு முடிகிறது அ.தி.மு.க.!’

mulliwaikkaal-muttamதஞ்சையில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கல் முற்றத்தின் பகுதியை மீண்டும் கட்டித் தருமாறு, சென்னையில் மாணவர்கள் நடத்திய போராட்டம் காவல் துறையினரைக் கதிகலங்க வைத்துவிட்டது. அண்ணா மேம்பாலத்தை பூட்டுப் போட்டு பூட்டிவிட்டனர் மாணவர்கள்!

செம்மொழிப் பூங்காவுக்கு வலதுபுறம் அமைந்துள்ள குறுகிய வீதியில் 21-ம் தேதி காலை 8 மணிக்கு மாணவர்கள் கூடினர். அந்த இடத்தைச் சுற்றிலும் 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் வாகனங்களில் வந்து இறங்கினர்.

மாணவர்கள் யாரும் இங்கே கூட்டமாக நிற்க வேண்டாம்’ போலீஸார் அறிவுறுத்த… ‘ஜனநாயக நாட்டில் நாங்கள் ஒன்றுகூடுவதுகூட குற்றமா?’ என மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.

இங்கே ஒரு பகுதி மாணவர்களுடன் காவல் துறையினர் பேசிக்கொண்டிருக்கும் போதே, இன்னொரு பகுதி மாணவர்கள் அண்ணா மேம்பாலம் மீது ஏறி, நீளமான இரும்புச் சங்கிலியால் பாலத்தின் குறுக்காக இழுத்து பூட்டுப்போட்டனர்.

உடனடியாகச் செயல்பட்ட போலீஸார், மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் பூட்டுக்களை உடைத்து போக்குவரத்தைச் சீர்படுத்தினர். ‘முள்ளிவாய்க்காலோடு முடிந்தது தி.மு.க.! முள்ளிவாய்க்கால் முற்றத்தோடு முடிகிறது அ.தி.மு.க.!’ என, மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், அண்ணா சாலையில் போக்குவரத்தும் தடைப்பட்டது.

மாணவர்களுடன் போராட்டத்தில் பங்கேற்று கைதான தமிழ் உணர்வாளரும் இயக்குநருமான வ.கௌதமன், ”இதுவரை சென்னையின் பல பகுதிகளிலும் மாணவர் போராட்டங்கள் நடந்துள்ளது.

ஆனால், சென்னையின் இதயப் பகுதியாக இருக்கும் அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்துக்குப் பூட் டுப் போட்ட போராட்டம், வரலாற்றுச் சிற ப்பு வாய்ந்த போராட்டம். மாணவர்கள் நினைத்தால் பாலத்துக்கு மட்டுமல்ல… அதிகார வர்க்கத்துக்கும் பூட்டுப் போடுவார்கள் என் பதுதான் இங்கே சொல்லப்படும் செய்தி” என்றார்.

போராட்டத்துக்கு தலைமை வகித்த மாணவர் ஜோ.பிரிட்டோ,

முள்ளிவாய்க்கால் எப்படி இன்றைக்கு வரை தி.மு.க-வின் துரோகத்தை சொல்லிக்கொண்டிருக்கிறதோ… அதேபோல் அ.தி.மு.க-வின் வீழ்ச்சியை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் இடிப்பு என்றென்றைக்கும் எடுத்துச் சொல்லும்.

இன்றைக்கு மாணவர்கள் சிறிய அளவிலேயே திரண்டு போராட்டம் நடத் தினோம். அதற்கே ஏழு துணை கமிஷனர்கள் தலைமையில் காவல் துறையினர் மற்றும் உளவுத் துறையினர் திரண்டு வந்தனர். ஆட்சியாளர்கள் போடக்கூடிய இரட்டை வேடத்தை நிறுத்திக்கொண்டு, எங்கள் நியா யமான கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எங்கள் போராட்டம் தொடரும். முள்ளிவாய்க்கால் முற்றத்தின் இடிக்கப்பட்ட பகுதிகளை எந்த சமரசமும் இல்லாமல் தமிழக அரசு கட்டித் தரவேண்டும்.

நெடுமாறன் உள்ளிட்ட 82 பேர் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்கு களையும் வாபஸ் வாங்க வேண்டும்” என்றார்.

மாணவர்களின் போராட்டம் ஆட்சியாளர்களுக்கு உணர்த்துமா?

TAGS: