ராஜீவ் கொலை வழக்கில் சதிகாரர்களை கண்டுபிடிக்க சிபிஐ ரூ. 100 கோடி செலவு: பேரறிவாளனின் வழக்கறிஞர்

rajiv-gandhiராஜீவ்காந்தி கொலை குறித்து பல்நோக்கு ஒழுங்கு விசாரணை கண்காணிப்பு முகமை நடத்தி வரும் விசாரணையை கோர்ட்டு கண்காணிக்கவேண்டும் என்று பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை வருகிற டிசம்பர் 10–ந் தேதி பிறப்பிப்பதாக தடா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சி.பி.ஐ. தரப்பில் வக்கீல் ரங்கநாதன், பேரறிவாளன் தரப்பில் வக்கீல் தடா என்.சந்திரசேகரன் ஆகியோர் ஆஜராகி வாதம் செய்தனர்.

விசாரணை முடிந்த பிறகு பேரறிவாளனின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் என்.சந்திரசசேகர் கூறியதாவது: சிறப்பு புலனாய்வு குழுவில் பல்நோக்கு விசாரணை முகமையின் இயக்குனர், இரண்டு இணை இயக்குனர்கள், டிஐஜி மற்றும் ஐந்து எஸ்.பி.க்கள் உள்ளனர். அவர்கள் தங்களின் ஆய்வு அறிக்கைகளை மூடிய உறைகளில் வைத்து நீதிமன்றத்தில் தொடர்ந்து தாக்கல் செய்கின்றனர். இந்த வழக்கு விசாரணைக்காக இதுவரை ரூ. 100 கோடி வரை செலவழித்துள்ளனர் என்றார்.

TAGS: