பென்சில் படத்தில் நடிப்பதற்கு முன்பாக தனக்கு விஜய், சிம்பு ஆகியோர் நிறைய நடிப்பு டிப்ஸ் கொடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர், ஜி.வி.பிரகாஷ் குமார் பென்சில் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். 25 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இவர் திருமணத்திற்கு பிறகு நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார். அதுவும், ‘நடிகைகளுடன் முத்தக் காட்சி மற்றும் அதிக நெருக்கமாக நடிக்கக் கூடாது’ என்ற மனைவியின் நிபந்தனைகளுடன் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் பென்சில் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப் பிடிப்பின்போது, ஜி.வி.பிரகாஷின் நடிப்பை பார்த்த பலரும், ‘முதல் படம் என்ற பயமே இல்லாமல், அனுபவம் வாய்ந்த ஹீரோ மாதிரி நடிக்கிறீர்களே’ என, பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஜி.வி.பிரகாஷோ, ‘என் நடிப்புக்கு பாராட்டு கிடைக்கிறதென்றால், நான் மட்டும் காரணமல்ல. ஏற்கனவே சிலரிடம் நடிப்புப் பயிற்சி பெற்ற எனக்கு, விஜய், சிம்பு ஆகிய இரண்டு நடிகர்களுமே நிறைய நடிப்பு டிப்ஸ் கொடுத்தனர். அதனால், இந்த பாராட்டு எனக்கு உறுதுணையாக இருந்த அனைவரையுமே சாரும்’ என்கிறார்.
படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பட நாயகி ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மணி நாகராஜ் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷே படத்துக்கு இசையமைக்கிறார்.