காஷ்மீர் மாநிலத்தில் பிரச்சாரம் செய்த குஜராத் முதல்வரும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி பேசுகையில், தற்போது மத்தியில் ஆளும் அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. சப்ரத்சிங் ,சமைல்சிங் ஆகியாரை பாகிஸ்தான் அரசு கொன்றது. ஆனால், பிரதமர் மன்மோகன்சிங் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை சரியானதல்ல. காஷ்மீரை ஒரு சூப்பர் மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே பா.ஜ.,வின் திட்டம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவு பலனிக்கிறதா, இல்லையா என்பது குறித்த விவாதம் நடத்தப்பட வேண்டும். அதில் சிறப்பு அந்தஸ்தினால் நன்மை என்று தெரிய வந்தால் அதனை ஏற்கத் தயாராக இருக்கிறோம்.என்று கூறினார்.