குளிர்கால நாடாளுமன்ற தொடரில் இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரப்படும்: திமுக

balu_stalinஎதிர்வரும் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போர் தொடர்பான சுயாதீன விசாரணை மற்றும் கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து பெற்றுக்கொள்ளல் ஆகிய விடயங்களை தீவிரமாக வலியுறுத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது.

திமுகவின் நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு இதனை அறிவித்துள்ளார்.

அத்துடன் அண்மையில் கொழும்பில் நடந்து முடிந்த பொதுநலவாய நாடுகளின் அமர்வு தொடர்பில் கலந்துரையாட தமது கட்சி எதிர்ப்பார்ப்பதாக பாலு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இறுதிப்போரின் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து, இந்தியா, சர்வதேச விசாரணை குழுவை அமைக்கவேண்டும் என்று தாம் வலியுறுத்தவுள்ளதாக பாலு தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையுடன் இந்தியா கடற்படை ஒத்துழைப்பை பேணுவது குறித்தும் அவர் கண்டனம் வெளியிட்டார்.

TAGS: