காஷ்மீரை வைத்து இந்தியா-பாக்., இடையே எந்நேரமும் போர் வரும் : நவாஸ் ஷெரீப்

india pakistan warஇஸ்லாமாபாத் : காஷ்மீரை மையமாகக் கொண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்நேரமும் 4வது முறையாக போர் நடைபெறும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும் தனது வாழ்நாளுக்குள் காஷ்மீரை இந்தியாவில் இருந்த பிரித்து தனிநாடாக அமைக்க வேண்டும் என்பதே தனது கனவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு பகுதியில் ஆசாத் ஜம்மு-காஷ்மீர் கவுன்சிலின் பட்ஜெட் கூட்டத்தில் பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது : காஷ்மீரை மையமாக கொண்டு இந்தியா,பாகிஸ்தான் நாடுகளிடையே எந்நேரமும் 4வது முறையாக அணுஆயுத போர் நடைபெறும்; இந்தியா ஆயுத போட்டியை ஏற்படுத்தி உள்ளது; அதனால் பாகிஸ்தானும் அதில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது; காஷ்மீர் பிரச்னையை அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தீர்க்க வேண்டும் எனவும், அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஐ.நா., தெரிவித்துள்ளது; ஆனால் இது நடக்காத காரியம்; இந்திய எல்லையில் பாக்., படைகளின் முன்னேற்றம் திருப்திகரமாக உள்ளது. இவ்வாறு நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நவாஸ் ஷெரீப் ஆற்றிய உரையை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருந்தது. அதில், இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்நேரமும் போர் வரும் எனவும், காஷ்மீரை தனி நாடாக பிரிப்பதே தனது கனவு எனவும் நவாஸ் ஷெரீப் கூறிய வரிகள் குறிப்பிடப்படவில்லை. ஆனால் நவாஸ் ஷெரிப்பின் விரிவான உரையை பாகிஸ்தான் பத்திரிக்கை ஒன்று முழுவதுமாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

TAGS: