இலங்கை கடற்படையினருக்கு இந்தியா பயிற்சி: ஜீ.கே.வாசன் கண்டனம்

GKVasanஇலங்கை கடற்படையினருக்கு பயிற்சியளிக்கும் திட்டத்தை இந்திய மத்திய அரசாங்கம் கைவிட வேண்டும் என்று இந்திய கப்பல்துறை அமைச்சர் ஜீ.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே இவ்வாறான கொள்கைக்கு தாம் எதிர்ப்பை வெளியிட்டு வந்தமையை வாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் மீண்டும் தமது எதிர்ப்பை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனிக்கு தெரியப்படுத்தியுள்ளதாக வாசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியா, இலங்கையில் தமிழர்கள் சமவுரிமையுடன் வாழ அழுத்தங்களை வழங்கவேண்டும் என்று வாசன் வலியுறுத்தியுள்ளார்.

TAGS: