தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் சென்னை ஐ.ஐ.டி.

iitவளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளில் தலைசிறந்த முதல் 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த 10 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.

லண்டனிலிருந்து வெளியாகும் “டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்’ பத்திரிக்கை, இந்தியா, சீனா, ரஷியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 22 நாடுகளில், மிகச்சிறந்த முதல் 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டது.

அதில் பிரதமர் மன்மோகன் சிங் பயின்ற பஞ்சாப் பல்கலைக்கழகம் 13-ஆவது இடத்திலும், அதனைத் தொடர்ந்து கர்காபூர் (30-ஆவது), கான்பூர் (34-ஆவது), தில்லி மற்றும் ரூர்க்கீ (37-ஆவது), குவாஹாட்டி (46-ஆவது), சென்னை (47-ஆவது) ஆகிய நகரங்களைச் சேர்ந்த ஐ.ஐ.டி.க்களும், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் (47-ஆவது), அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் (50-ஆவது), தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (57-ஆவது) ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

பெரும்பாலும் சீனப் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றிருந்த இந்தப் பட்டியலில், பாகிஸ்தானின் ஒரு பல்கலைக்கழகம் கூட இடம் பெறவில்லை.

TAGS: