பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி பகுதியில் வாழ்ந்து வரும் தமிழர்கள் அனைவரும் தங்களுக்குச் சொந்தமான நிலங்களை அப்படியே விட்டுவிட்டு வெளியேற வேண்டும் கேரள அரசு ஆணையிட்டிருக்கிறது. இதனால் அட்டப்பாடி தமிழர்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அட்டப்பாடியில் தமிழர்கள் விவசாயம் செய்துவரும் நிலங்கள் பழங்குடியினருக்கு சொந்தமானவை என்றும்,பழங்குடியினரின் நிலங்கள் அவர்களுக்கே சொந்தம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழர்கள் தங்களின் நிலங்களை பழங்குடியினரிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் கேரள அரசு கூறுகிறது. பழங்குடியினருக்கு சொந்தமான நிலங்களை தமிழர்கள் எந்தக் காலத்திலும் ஆக்கிரமிக்க வில்லை. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பாகவே தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இருந்து அட்டப்பாடியில் குடியேறிய தமிழர்கள் தான் அந்தப் பகுதியை வளம் கொழிக்கும் பூமியாக்கினர். ஒருகட்டத்தில் ஆதிவாசிகள் முழு மனதுடன் தங்கள் நிலங்களை தமிழர்களுக்கு விற்பனை செய்தனர்.
பழங்குடியினரின் நிலங்களை மற்றவர்கள் வாங்குவது தொடர்பாக பிரச்சினை எழுந்தபோது அது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பழங்குடியினரின் நிலங்களை மீட்டு அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் 1999ஆம் ஆண்டில் சட்டமியற்றிய கேரள அரசு, 1986ஆம் ஆண்டுக்கு முன் பழங்குடியினரின் நிலங்களை வாங்கியோர் 5 ஏக்கரை வைத்துக் கொண்டு மீதமுள்ள நிலங்களையும், அதற்குப் பின் நிலம் வாங்கியோர் அதை முழுமையாகவும் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவித்தது. அதன்மீது, கடந்த 14 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இப்போது திடீரென தமிழர்களை விரட்டுவதில் கேரளா தீவிரம் காட்டுகிறது.
தமிழர்களில் பெரும்பாலோனோர் 1986 ஆம் ஆண்டுக்கு முன்பே நிலங்களை வாங்கியுள்ளனர். எனவே அவர்கள் நிலங்களை ஒப்படைக்கத் தேவையில்லை. அதுமட்டுமின்றி, நிலங்களை விற்பனை செய்த பழங்குடியினரும், அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த மலையாள விவசாயிகளும் தமிழர்கள் நிலத்தை திரும்ப ஒப்படைக்கத் தேவையில்லை என்று வெளிப்படையாக கூறிவருகின்றனர். ஆனால், கேரள அரசில் பணியாற்றும் இ.ஆ.ப., மற்றும் இ.கா.ப., அதிகாரிகள் சிலர், பழங்குடியினரின் நிலங்களை பெருநிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நோக்குடன் தான் தமிழர்களை விரட்ட முயல்கின்றனர். இதற்காக இரவு நேரங்களில் தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அத்துமீறுதல், பொய் வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்தல் உள்ளிட்ட செயல்களில் கேரள காவல்துறை ஈடுபட்டிருக்கிறது. தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் வாழ்வாதாரங்களை பறித்து துரத்தியடிக்க கேரள அரசு முயல்வதும், அதற்காக தமிழர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதும் கண்டிக்கத் தக்கவை.
கேரளாவில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள பழங்குடியினருக்கு சொந்தமான 28 ஆயிரம் ஏக்கர் நிலங்களை பன்னாட்டு பெருநிறுவனங்கள் பறித்துக் கொண்டுள்ளன. அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்காத கேரள அரசு, தமிழர்களின் வாழ்வாதாரமாக கருதப்படும் நிலங்களை மட்டும் பறிக்க முயல்வது முறையல்ல.
சட்டத்திற்கு முரணான கேரள அரசின் நடவடிக்கையால் 2500 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, அட்டப்பாடியிலிருந்து தமிழர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை கேரள அரசு கைவிட வேண்டும். தமிழக முதலமைச்சரும், கேரள முதலமைச்சரைத் தொடர்பு கொண்டு பேசி அட்டப்பாடி தமிழர்களை காக்க முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
டேய் முதேவி! தனி தமிழர் நாட்டை பிரிக்க கேக்க உனக்கு …… இல்லையா? எதையாவது வச்சு அரசியல் நடத்திரதேலே இருங்க! வாயிலே நல்ல வருது…………..
இவனே ஒரு ஜாதி வெறி பிடித்த மூதேவி ,ஜாதி கட்சி வச்சி நடத்துறவன் ,இவனெல்லாம் பேசுறான்!!!
இப்படியே பாமர தமிழர்கள் இனமான உணர்வு அற்று, தினம்2 சீரியல்களிலும், சினிமாக்களிலும், கன்னட கூத்தாடி பாப்பாத்தி அம்மா பாமர தமிழர்கள் குடும்ப நலம்-வளம் பேணிகாக்க நடத்தும் டாஸ்மாக் கடைகளிலும் மூழ்கிக் கிடந்தால், அண்டை மாநிலங்களில் இருந்து மட்டும் அல்ல, சொந்தத் தமிழர் நாட்டிலில் இருந்தும் விரட்டப்படுவார்கள். இப்பொழுதே அரசியலிலும், பொருளாதாரத்திலும் அந்நியர்களுக்கு தமிழர்கள் மானமிழந்து, தன்மானம் இன்றி எடுபிடி ஏவகம் செய்யும் இழி நிலை.. !!!
மருத்துவர் ஐயா, தாங்கள் சாக்கடை சனியன் சாதியை மறந்து, தமிழர்கள் என்ற உணர்வோடு அரசியல் நடுத்துங்கள். Ego வேண்டாம். தமிழருக்கும் தமிழர் நாட்டுக்கும் நல்லது.
அட்டப்பாடியில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள் “தமிழர் நாட்டுக்கு” வந்து அங்கு கேரளத்தவர் மிக இலாபகரமாகவும், ஆணவத்துடனும், தமிழர்களை சற்றும் மதியா வண்ணமும் நடத்தும் பெரும் நகைக்கடைகள், bakeryகள், உணவகங்கள் etc etc போன்றவற்றில் எடுபிடி அட்டையர்களாக, கைக்கட்டி சேவகம் செய்யலாமே. பிரச்சனை தீர இதுபோன்ற நல்ல வழிகள் இருக்கும் போது வீணே எதற்கு அடம்பிடித்து பிரச்சனை…? மானம் இழந்த இனம் என்ன சேவகம் வேண்டுமானாலும் செய்யலாமே…! இதில் இழப்பதற்கு என்ன உள்ளது..?!
இதனாலேதான், இந்தியானாவது மண்ணாங்கட்டியாவது என்று MOHAN, Mohan அடிக்கடி கூப்பாடு போடுவது. பழையபடிக்கு நாம் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்ற நிலைக்குச் சென்று விடுவோம். பாவமில்லை. நன்மையே.
அப்படியா THENI ,ரொம்ப நன்றி
ஒன்னும் வேண்டாம்,தமிழ் நாட்டில் உள்ள மலையாளிகளை விரட்டுங்கள்,அந்த இடத்தில கேரளா தமிழர்களை அமர்த்துங்கள்.
அண்டை மாநிலத்துக்கு அனுப்பும் கரண்டை கட் பண்ணுங்கள் .தமிழ் நாட்டுக்கு தமிழனை முதல் அமைச்சராக தேர்ந்து எடுங்கள். அய்யா ராமதாசு அவர்களும் ஓகே . முதல் அமைச்சராக வந்தால் சாதி பேச மாட்டார் என்று நம்புவோம்.
Theni அவர்களே , ரொம்ப நன்றி
நம் மலை பகுதிகள் வடக்கிலும்,மேற்கிலும் ஆந்திரா,கன்னட,கேரளா பங்கு போட்டனர்! அவை மீண்டும் தமிழர் நாட்டு எல்லைக்குள் எந்த நிபந்தனையும் இன்றி சேர்க்கப்பட வேண்டும்! இன்று தமிழ் முழுவதும் தண்ணீர் பற்றகுறைக்கு இதுவே முக்கிய காரணம்! தமிழ் நாட்டு மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு! தமிழனுக்கு அன்றாடம் பவர் கட்! கூடங்குளம் அணுமின் உற்பத்தி வருமானம் அண்டை மாநிலங்களுக்கு! தமிழனுக்கு அதன் கழிவுகள்! பத்தாதிற்கு தமிழ் நாடு முழுவதும் மார்வாடிகள் ஆதிக்கம்! போதும் போதும் இந்த நிலை! இனியும் ஏமாற முடியாது வடவனிடம்!தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!!!