போபால், டிச. 7–மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 25–ந்தேதி தேர்தல் நடந்தது.
அங்கு மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் சுமார் 140 தொகுதிகளில் ஆளும் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியானது.
இதற்கிடையே ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு ஓட்டு எண்ணிக்கைக்கு 2 வாரம் காத்திருக்க வேண்டியதிருந்ததால் மத்திய பிரதேச மாநில கட்சித் தலைவர்களிடம் ஆர்வமும், எதிர்பார்ப்பும் அதிகரித்து விட்டது. இதன் காரணமாக எல்லா கட்சித் தலைவர்களும் சாமி கும்பிடத் தொடங்கி விட்டனர்.
தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனால் மத்திய பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கோவில்களில் அரசியல்வாதிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது.
மத்திய பிரதேச மாநில ஆளும் பா.ஜ.க. முதல்– மந்திரி சிவ்ராஜ்சிங் சவுகானும் கடந்த இரு நாட்களாக கோவில், கோவிலாக சென்றபடி உள்ளார். நேற்று ஒரே நாளில் மட்டும் அவர் 5 கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான உஜ்ஜைனியில் உள்ள மகா காளேசுவரர் கோவில், நர்மதாவில் உள்ள ஓம்காரேஸ்வரர் கோவில், இந்தூரில் உள்ள விநாயகர் கோவில்களில் முதல்–மந்திரி சிவ்ராஜ் சவுகான் சிறப்பு வழிபாடு நடத்தினார். பிறகு சல்கான்பூரில் இருக்கும் தன் குல தெய்வ கோவிலான பிஜசென் தேவி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.
கோவில்கள் தவிர பீடங்கள், மடங்களுக்கு சென்று மகான்களிடமும் அரசியல்வாதிகள் ஆசிபெற்று வருகிறார்கள். மீண்டும் பா.ஜ.க. ஆட்சியில் அமர வேண்டும் என்று பா.ஜ.க. வேட்பாளர்கள் அனைவருமே பூஜைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களைப் பார்த்து காங்கிரஸ் வேட்பாளர்களும் கோவில்களுக்கு படை யெடுத்து வருகிறார்கள். நாளை இந்நேரத்துக்கு மத்திய பிரதேச வேட்பாளர்களில் யார், யாருக்கு கடவுள் அருள் கிடைத்துள்ளது என்பது தெரிந்துவிடும்.
நெற்றியில் வீரத்திலகம் எதுக்கடா..! நேர்மையாக சேவை செய்திருந்தால் பயம் ஏனடா.! கோவில் கோவிலாக வழிபாடு எதற்கடா.! எருமையே..!
எஸ் மர். புச்சண்டி யு ஆர் ரைட்
பார்பன கூட்டம். மூட நம்பிக்கையின் தலைமைபீடம், பிரித்தாளும் சூழ்ச்சியின் தலைமையிடம்.புது புது ஜாதிகளை உருவாக்குபவர்கள்.