மூட நம்பிக்கை எதிர்ப்பாளர் கொலை தொடர்பில் இருவர் கைது

dabholkar_304x171_apஇந்தியாவில் மஹராஷ்ட்ரா மாநிலத்தில் மூடநம்பிக்கைகளுக்கும் மந்திரவாதிகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்துவந்த செயற்பாட்டாளர் ஒருவரை கொலை செய்தமை தொடர்பில் காவல்துறையினர் இரண்டு பேரைக் கைதுசெய்துள்ளனர்.

புனே நகரில், காலை-நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நரேந்திர தபோல்கர் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில், அற்புதங்களை நிகழ்த்துவதாக கூறிவரும் சாமியார்களையும் ஆன்மீக குருமாரையும் எதிர்த்து சில தசாப்தங்களாகவே தபோல்கர் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவந்துள்ளார்.

சில சமய சடங்குகளின் போது நடக்கும் மிருக பலிகளையும் அவர் எதிர்த்துவந்துள்ளார்.

அவரது கொலை, நாடு முழுவதிலும் மூடநம்பிக்கை- எதிர்ப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மேலும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. -BBC

TAGS: