மோடியைக் குறிவைக்கிறது இந்தியன் முஜாகிதீன்: மத்திய உள்துறை எச்சரிக்கை

mujaபுதுடெல்லி, டிச. 10-இந்தியாவில் அப்பாவிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது இந்தியன் முஜாஹிதின் என்ற தீவிரவாத அமைப்பு. இந்த அமைப்பானது மற்ற தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்து சமீபத்தில் நேபாளத்தில் ரகசிய கூட்டம் நடத்தியது. அதில் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும், எம்.பி.யும் பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளருமான ஷானவாஸ் ஹூசைனையும் கொல்ல திட்டமிட்டுள்ளதாக பீகார் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியன் முஜாஹிதின் தீவிரவாத அமைப்பின் கொலை பட்டியலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பெயர் முதலிடத்தில் உள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பாட்னா போலீசாரிடம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பீகார் காவல்துறையும், புலனாய்வு அமைப்புகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

மோடிக்கு அடுத்து பாரதிய ஜனதா தலைவர் ஷானாவாஸ் ஹூசைன் இந்த கொலைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவர் அடிக்கடி பீகார் சென்றுவரும் அவருக்கும் ஆபத்து இருக்கிறது. இதனால் இவர்களது பாதுகாப்பு குறித்து பீகார் போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர்.

சமீபத்தில் பீகார் மாநிலம் பாட்னா பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசுவதற்கு முன்பு அந்த மைதானத்திலும் அதனை சுற்றியுள்ள 7 இடங்களிலும் குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த வாரம் பீகாரில் மாவோயிஸ்ட் நடமாட்டமுள்ள பகுதிகளில் மூத்த பாரதிய ஜனதா தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் பீகார் புலனாய்வு அதிகாரிகளின் எச்சரித்தனர். இதையடுத்து அப்பகுதி மாவட்ட கண்காணிப்பு போலீஸ் அதிகாரிகள் மிகவும் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

TAGS: