இலங்கை விடயத்தில் இந்தியா மென்மைப்போக்கை கடைப்பிடிக்கிறது: பாரதீய ஜனதாக்கட்சி குற்றச்சாட்டு

BJP-logo_0தமிழகத்தின் எதிர்ப்பு இருக்கும் போது இந்திய மத்திய அரசாங்கம், இலங்கையின் படையினருக்கு பயிற்சிகளை எவ்வாறு வழங்க முடியும் என்று பாரதீய ஜனதாக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

அட்டல் பிஹாரி வாஜ்பாய், பிரதமராக இருந்தபோது பணத்துக்காக கூட இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கப்போவதில்லை என்று இந்தியா தெரிவித்திருந்தது.

எனினும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்ந்துக்கொண்டிருப்பதை தெரிந்துக்கொண்டும் கூட மன்மோகன்சிங்கின் அரசாங்கம் இலங்கைப்படையினருக்கு பயிற்சி வழங்க உறுதியளித்தமை வியப்புக்குரியது என்று பாரதீய ஜனதாக்கட்சியின் மூத்த தலைவர் எல் கணேசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சென்னையில் கூட்டத்தை நடத்திய அமைச்சர் சிதம்பரம் இலங்கை தமிழர்களுக்கு சார்பான பேசினார்.

இந்நிலையில் இந்தியா, இலங்கைப்படையினருக்கு பயிற்சி வழங்கப்போவது தொடர்பில் அவர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

TAGS: