செவ்வாய் கிரகத்துக்கு சென்று அங்கேயே நிரந்தரமாக தங்குவதற்கான பயணத்துக்கு, இந்தியர்கள் 20,000 பேர் உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 2,02,586 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாகத் தங்குவதற்கான “ஒரு வழிப் பயணம்’ ஒன்றை “மார்ஸ் ஒன்’ என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயணத்துக்காக 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார் 2 லட்சம் விண்ணப்பங்கள் அந்த தனியார் நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த மொத்த விண்ணப்பத்தில் 24 சதவீதம் அமெரிக்காவில் இருந்தும், 10 சதவீதம் இந்தியாவில் இருந்தும், 6 சதவீதம் சீனாவில் இருந்தும், 5 சதவீதம் பிரேசிலில் இருந்தும், மீதமுள்ள விண்ணப்பங்கள் பிரிட்டன், கனடா, ரஷியா, மெக்ஸிகோ, பிலிப்பின்ஸ், ஸ்பெயின் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் பெறப்பட்டுள்ளன. மார்ஸ் ஒன் நிறுவனத்தின் தேர்வுக் குழு தேர்வு செய்யும் தகுதியுடைய நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் 2023ஆம் ஆண்டு ஒரு குழுவாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
நல்ல விசியம்தான் ,ஆனால் தமிழனையும் இந்தியனையும் அனுப்ப வேண்டாம் ! அங்கேயும் போயி ஜாதி சண்ட போட்டுக்குவானுங்க
aamaam, angkeh poyum samsu adipaan.
அங்கே போகும் பொது அந்த செவ்வாய்கிரகத்திட்கு எத்தனை இளம் பெண்கள் உடன் போகின்றார்கள் ?
அங்கே போயும் அரசியல் அமைத்து செவ்வாய் கிரகத்தையும் நாசம்
பண்ணுங்கடா.
இருக்கிற செவ்வாய்தோஷம் பத்தாதா? இன்னும் ஏன் தேடிக்கினோம்?
மானிடர் வாழ்வதற்கு சிறந்தத இடம் பூமி மட்டுமே! பூமியை பாதுகாக்கவே மற்ற கிரகங்கள்! ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! அதுவே உண்மை!
அங்கு போவதற்கு முன்பு, அந்தப் பணத்தில் கொஞ்சம் ஒதுக்கி நீங்கள் வசிக்கும் பகுதிகளில் தரமான சில கழிவறைகளைக் கட்டி நாட்டின் மானத்தைக் காப்பாற்ற உதவுங்கள். வேறுஒன்றும் ரொம்ப பெரிதா செய்ய வேண்டாம். இந்தியாவிற்கு இன்று மிக அவசியமானவைகளில் ஒன்று நல்ல பொது கழிவறைகள், மதிமிகு அப்துல்காலாம் கூட இது குறித்து பேசுவது கிடையாது….!!