இலங்கை தமிழர்கள் குறித்து நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் பயனற்றது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
வேலூரில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி, அதை தடுக்கும் முயற்சியில் பெரம்பலூரைச் சேர்ந்த அப்துல் ரவுப், துண்டு அறிக்கையை தயார் செய்து உடல் முழுவதும் மண்எண்ணெயை ஊற்றி பற்ற வைத்துக்கொண்டு துண்டறிக்கைகளை வீசிக்கொண்டே வீர மரணத்தை தழுவினார்.
அந்த முதல் தமிழரின் நினைவு நாளான 15–ம் திகதி வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை தமிழர்கள் குறித்து நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் பயனற்றது.
இலங்கை பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதங்கள் மட்டும் அனுப்பி வருகிறது.
ஆனால், மத்திய அரசு இலங்கை நட்பு நாடு என்கிறது. போர் கப்பலை இந்திய அரசு இலங்கைக்கு பரிசாக வழங்கி உள்ளது.
காங்கிரஸ் கட்சி தமிழர்களின் உணர்வுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என சீமான் கூறினார்.
முதலில் காங்கிரெஸ் ஆட்சியை மாற்றுங்கள் . எல்லாம் சரியாகும் .