தமிழகத்து ராஜபக்ச தான் கருணாநிதி: நாஞ்சில் சம்பத் காட்டம்!

karunanith_mahinda_001கருணாநிதி தமிழகத்து ராஜபக்ச என்றும் ராஜபக்ச இலங்கையின் கருணாநிதி என்றும் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அ.தி.மு.க ஆட்சியின் இரண்டாண்டு சாதனை மற்றும் ஏற்காடு இடைத்தேர்தல் வெற்றி விழா பொதுக்கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

மாநகர் மாவட்ட செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான மனோகரன் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன், எம்.எல்.ஏ பரஞ்சோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசுகையிலே இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று கருணாநிதி, இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக தீர்மானம் வாசிக்குறாரு. காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லன்னு பொதுக்குழுவில் அறிவித்திருக்கிறார். உண்மை என்னவென்றால் அந்த ரெண்டு கட்சியுமே கருணாநிதியை சேர்த்துக்கொள்ள தயார் இல்லை. தனிச்சு விடப்பட்டவர் இன்னிக்கு இவர் தனியா போறதா சொல்றாரு. உங்க நடிப்பை மக்கள் மறக்க மாட்டாங்க.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது ஒண்ணும் செய்யாமல் சும்மா வேடிக்க பார்த்த கருணாநிதி இன்றைக்கு ஈழ மக்களுக்கு ஆதரவாக அறிக்கை விடுகிறார். 1 லட்சத்து 76 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இவர் அசஞ்சு கூட கொடுக்கல. திருச்சி, ஊட்டினு இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி கொடுத்தார். தமிழகத்தில் கருணாநிதி குடும்ப ஆட்சி நடப்பதை போல, இலங்கையில் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோத்தபய ராஜபக்சன்னு ஒரு குடும்ப கூடமே ஆட்சி செய்து.

கருணாநிதி தமிழகத்து ராஜபக்ச, ராஜபக்ச இலங்கையின் கருணாநிதி, இந்த இரண்டு பேருக்கும் வித்தியாசம் இல்லை. அம்மாவைப்போல் சட்ட சபையில் தீர்மானம் போடாத கருணாநிதி, தன்னுடைய மகளை அனுப்பி ராஜபக்சவிடம் பரிசு வாங்கிட்டு வந்து பொக்கிஷமா பாதுகாக்கிறார் என்றார்.

TAGS: