லோக்பால் மசோதா நிறைவேறியது : ராஜ்யசபாவில குரல் ஓட்டெடுப்பு

lok_balபுதுடில்லி: புதிய லோக்பால் மசோதா நிறைவேற்றப்படுவது மூலம் ஊழல் குற்றம் புரிந்தவர்களுக்கு குறைந்தது 2 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை வழங்க முடியும் என்றும், நாட்டு மக்களின் குரலே இந்த மசோதா உருவாக காரணமாக அமைந்து விட்டது; இந்நாள் வரலாற்றில் போற்றபட்பட வேண்டிய நாள் என்றும் மத்திய சட்ட துறை அமைச்சர் கபில் சிபல் இன்றைய ராஜ்யசபாவில் விளக்கமளித்து பேசுகையில் குறிப்பிட்டார். பல்வேறு கட்சிகளின் விவாதங்கள் முடிந்த பின்னர் லோக்பால் மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. சில கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்களுக்கு ஓட்டெடுப்பில் ஆதரவு இல்லாததால் இவை நிராகரிக்கப்பட்டன.

மதியம் 12 மணிக்கு ராஜ்யசபா கூடியதும்: இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த ராம்ராம்கோபால் யாதவ் பேசுகையில்: தற்போதுள்ள லோக்பால் மசோதா கொண்டு வந்தால் அதிகாரிகள் யாரும் செயல்பட அஞ்சுவர். இது அரசாங்கத்தின் நடவடிக்கையை முடக்கும் . இந்த மசேதா நாட்டின் விருப்பம் அல்ல. இவ்வாறு பேசிய அவர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஊழல்வாதிகளுக்கு 10 ஆண்டு ஜெயில்: இந்த மசோதா குறித்து மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறுகையில்: இந்த லோக்பால் மசோதா நிறைவேற்றப்படுவது இந்த அவைக்கு வரலாற்று முக்கியம் வாய்ந்த புகழை தரும். மக்களின் விருப்பம் போல் இது உருவாக்கப்பட்டுள்ளது.. அவைக்கு வெளியே ஒலிக்கும் குரலை நாம் கவனிக்க வேண்டும். இந்த நாட்டில் பரவிக்கிடக்கும் ஊழலை ஒழிக்க கோடிக்கணக்கான மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இவர்களின் எண்ணத்தின்படி இந்த மசோதா நிறைவேற்றுவதற்குரிய நேரமிது. மற்றும் நாம் அனைவரும் இந்த மசோதா வருவதை நாம் கொண்டாட வேண்டும். அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதில் அரசியல் தேவையில்லை. அனைவரும் ஒருமித்த குரலில் ஒலிக்க வேண்டும். இந்தசட்டம் நிறைவேற்றப்பட்டால் சி.பி.ஐ., டைரக்டரை லோக்பால் அமைப்புக்கு தெரிவிக்காமல் மாற்றம் செய்ய முடியாது.

லோக்பால் 5 பேர் கொண்ட குழுவை அமைக்கலாம். இந்த குழுவினர் ஊழல் விசாரணையை கண்காணிக்க முடியும் . ஊழல் தொடர்பாக ஒருவர் மீதான முதல் கட்ட விசாரணை 3 மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். விசாரணை அதிகபட்சம் ஒராண்டுக்குள் முடியும். பிரிவு 50 ன்படி குறைந்தது 2 ஆண்டு முதல் அதிகப்பட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து மட்டத்திலும் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரிக்க முடியும். லோக்பால் விஷயத்தில் அரசு தலையிடாது. இவ்வாறு கபில்சிபல் பேசினார்.

40 ஆண்டு கால விவாதம் முடிவு: நம்பிக்கையான லோக்பாலாக இருக்க வேண்டும் என ராஜ்யசபாவின் எதிர்கட்சி தலைவர் அருண் ஜெட்லி கூறினார். அரசியல் சூழல் மாறியதால் அரசின் நிலையும் மாறியது. கடந்த 2011 ஆகஸ்டில் ல் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். இந்த மசோதா நம்பிக்கை கொண்டதாக, வலுவானதாக இருக்க வேண்டும் என பா.ஜ., விரும்புகிறது. 40 ஆண்டு கால விவாதம் இன்று முடிகிறது என்பது நன்று. மத ரீதியாக, சாதி ரீதியிலான நியமனம் லோக்பாலில் இருக்க கூடாது . எதிர்காலத்தில் இன்னும மாற்றங்கள் இதில் கொண்டு வரமுடியும் என நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. லோக்பால் நிறைவேற்றப்பட்டால் தவறான முடிவுகளை எடுக்கு அதிகாரிகள் அஞ்சுவர். இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

ஹசாரே டி.வி., மூலம் கவனிக்கிறார் : ராஜ்யசபாவில் நடக்கும் விவாதங்களை உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரே டி.வி., மூலம் கவனித்து வந்தார். 8 வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஹசாரே இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட செய்தி கிடைத்ததும் தமது போராட்டத்தை விலக்கி கொள்வேன் என கூறியுள்ளார். மாலையில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்ட தகவல் அறிந்ததும் , ஹசாரே உண்ணாவிரத பந்தலில் இருந்தவர்கள் ஆடி, பாடி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

TAGS: