அந்தரங்க பகுதியில் சோதனை: தேவயானியின் கதறல் கடிதம்

devayani_003அமெரிக்காவில் தாம் கதறி அழுத போதும் ஆடைகளைக் களைந்து அந்தரங்க பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டதாக துணைத் தூதர் தேவ்யானி கடிதம் எழுதியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பணியாற்றும் இந்திய தூதர் தேவ்யானியை அமெரிக்க பொலிசார் கைது செய்ததும், அத்துமீறி நடந்து கொண்ட விதமும் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க பொலிஸ் நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்த பின்பு தேவ்யானி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவர் நடந்த சம்பவம் பற்றி டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் உருக்கமான கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், அமெரிக்க பொலிசார் என்னை கைது செய்த போது தூதர் என்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. துணைத் தூதர் என்ற அடிப்படையில் எனக்கு தூதரக ரீதியிலான பாதுகாப்பு உள்ளதை கைது செய்த அதிகாரிகளிடம் நான் பல முறை எடுத்துக் கூறினேன்.

ஆனால் அவர்கள் தொடர்ந்து என்னை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினார்கள். மீண்டும், மீண்டும் கை விலங்கு மாட்டினார்கள். என் ஆடைகளை களைந்து சோதனையிட்டனர்.

அத்துடன் உடலின் அந்தரங்க பகுதிகளிலும் சோதனை நடத்தினர். டி.என்.ஏ., சோதனைக்காக மாதிரிகளையும் என்னிடம் இருந்து எடுத்தனர்.

மேலும் கிரிமினல் குற்றவாளிகளுடனும், போதை பொருள் கடத்தல்காரர்களுடனும் என்னை அடைத்து வைத்தனர், நான் மனம் உடைந்து பல முறை கதறி அழுதும் என்னை விடவில்லை என்றும் இப்போது நாடு எனக்கு ஆதரவாக இருப்பது புதிய பலத்தை தருகிறது எனவும் கூறியுள்ளார்.

TAGS: