குஜராத் கலவரம் தொடர்பில் நரேந்திர மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

modi_gujarat_cmகுஜராத் கலவரங்களை மோடி முன்னின்று நடத்தினார் என்று கூறப்பட்டும் குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக அஹமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

பாரதிய ஐனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டுள்ள நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் அவர் 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தை தடுக்க ஏதும் செய்யாது மட்டுமல்லாது, கலவரக் கார்ர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டை பிரதானமாக முன்வைக்கின்றனர்.

குஜராத் கலவரத்தின் போது அகமதாபாத் நகரில் நடைபெற்ற ஒரு தாக்குதல் சம்பவத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஷான் ஜாப்ரி உள்ளிட்ட 68 பேர் குல்பர்கா குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற தீ வைப்புத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.வன்முறையாளர்கள், தமது குடியிருப்புப் பகுதியை சுற்றி வளைத்த நிலையில், இஷான் ஜாப்ரி பல காவல்துறை அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் தொடர்பு கொண்டு தம்மை காப்பாற்றும்படி கேட்டும் யாரும் அவருக்கு உதவவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தக் கலவரத்தை அடக்க காவல்துறை முயலவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளதுஇந்தக் கலவரத்தை அடக்க காவல்துறை முயலவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது

இந்தப் பின்னணியில் கலவரத்தின் போது நரேந்திர மோடி ஆற்றிய பங்கு குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் என்று கொல்லப்பட்ட ஜாபரின் மனைவி ஐக்கியா ஜாப்ரி விசாரணை கோரியிருந்தார்.

கோத்ராவில் 59 கரசேவகர்கள் ரயிலில் எரித்துக் கொல்லப்பட்டதற்கு இந்துக்கள் பழிதீர்க்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் மோடி காவல்துறை அதிகாரிகளிடம் சொன்னதாக மூத்த ஐ பி எஸ் அதிகாரி அதிகாரி சஞ்சீவ் பட்டும் குற்றம் சாட்டியிருந்தார். எனவே கலவரத்தில் மோடிக்கு உள்ள நேரடிப் பங்கை வெளிக் கொண்டு வரக் கூடிய முக்கிய வழக்காக இந்த வழக்கு பார்க்கப்பட்டது.

ஆதாரம் இல்லை

முதல்வர் நரேந்திர மோடிமுதல்வர் நரேந்திர மோடி

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த விடயங்களின் பின்னணியை ஆராய மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ யின் முன்னாள் இயக்குனர் ஆர் கே ராகவன் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இந்தக் குழு கடந்த 2010 ஆம் ஆண்டு மோடியிடம் 9 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தியது. அதன் பிறகு இது அளித்த அறிக்கையில், வழக்குத் தொடுக்கும் அளவுக்கு நரேந்திர மோடிக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

மேலும் மோடியின் நிர்வாகத்தில் முக்கியப் பதவிகள் கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருந்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் அளித்த சாட்சியத்தை சிறப்பு புலனாய்வுக் குழு ஏற்க மறுத்தது. இந்த வழக்கே செயற்பாட்டாளர் தீஸ்த்தா சேடல்வாட் உந்துதலால் தொடுக்கப்பட்டது என்றும் அது கூறியிருந்தது. இந்த விசாரணை அறிக்கையை ஏற்று வழக்கை முடிப்பதாக அகமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை பாஜக வரவேற்றுள்ளது.

மேல் முறையீடு

குஜராத் கலவரத்தில் 790 முஸ்லீம்களும், 254 இந்துக்களும் கொல்லப்பட்டதாகவும், 223 பேரைக் காணவில்லை என்றும் மத்திய அரசு அளித்த புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இந்த கலவரத்தில் தொடர்புடையதாக குற்றம்காணப்பட்ட மோடியின் அமைச்சர் உள்ளிட்ட பலர் தண்டனை பெற்றுள்ளனர். ஆனால் மோடியின் மீது நேரடியாக ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை. இந்நிலையில் இந்த தீர்ப்பு தொடர்பாக மேல் முறையீடு செய்யப்போவதாக கொல்லப்பட்ட இஷான் ஜாப்ரியின் மனைவி ஐக்கியா ஜாப்ரியின் வழக்கறிஞர் கூறியுள்ளார்

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு மோடிக்கு எதிரான ஆதாரங்களை உரிய முறையில் பரிசீலிக்கவில்லை என்ற விமர்சனமும் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றை தீர்ப்பு தமது விசாரணை அறிக்கையை அங்கீகரித்துள்ளதாக ஆர் கே ராகவன் கூறியுள்ளார். -BBC

TAGS: