தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் போதி தர்மருக்கு சிலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள காஞ்சிபுரத்தில் பிறந்த போதி தர்மர், சுமார் 1500 வருடங்களுக்கு முன் இந்தியாவை விட்டு தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பணயம் செய்து இறுதியாக சீனா சென்றார்.
அங்கு அவர் சீன பாரம்பரிய வரலாற்றில் புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட சான் புத்த மதத்தின் முதல் தலைவராகவும், மகாயண புத்த மதத்தின் 28வது தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
கி.பி 6ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்த சீனத் துறவியும், சுற்றுப்பயணியுமான யீ ஜங் எழுதியுள்ள குறிப்புகளில் “தாமு” தென்னிந்திய நகரமான காங்-சியிருந்து சீனாவுக்கு வந்தபோது அவர் போதி தர்மர் என்று அழைக்கப்பட்டதாகவும், அவர் அங்கு மகாயண புத்த மதத்தை பரப்பியதாகவும் கூறியுள்ளார்.
சீனாவின் ஹெனன் மாகாணத்திலுள்ள புகழ்பெற்ற ஷோலின் கோயிலில் “குங்பூ” என்ற தற்காப்பு கலையை அவர் பயிற்றுவித்து வந்ததாகவும் ஜங் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மண்ணிலிருந்து சென்ற இத்துறவி தனது போதனைகளின் மூலம் சீன, ஜப்பான் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தார்.
இந்நிலையில் சீனத்துறவியும், ஷோலின் கோயிலின் நிர்வாக இயக்குனருமான ஷி யான் லின் தலைமையில் ஒரு குழு சில தினங்களுக்கு முன் காஞ்சி நகருக்கு வந்தது.
அப்போது சீனா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் அளிக்கும் நிதியுதவியின் மூலம் போதி தர்மருக்கு நினைவிடம் அமைக்க முயன்று வரும் சென்னையை சேர்ந்த பண்டைய கல்வி ஆய்வு நிறுவனத்தின் இயக்குனரான ஜான் சாமுவேலுடன் ஷி யான் லின் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இத்திட்டம் முடிவடைந்தால் உலகத்தரம் வாய்ந்த புத்த மத தத்துவ மையமாக இது உருவெடுக்கும் என ஜான் சாமுவேல் தெரிவித்துள்ளார்.
இந்த நினைவிடத்தில் சீனாவின் சோங்ஷான் மலையில் 9 வருடங்கள் தியானம் செய்த போதி தர்மருக்கு அந்த மலையிலிருந்து செதுக்கப்பட்ட அவரது திருவுருவ சிலையை நிறுவப்போவதாக லின் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிலிந்து இங்கு வந்து இத்திட்டத்தில் இணைந்து பணியாற்றி வரும் டோக்கியோ பல்கலைக்கழக விரிவுரையாளர் ட்சுட்டோம்பு காம்பே தலைமையிலான குழுவினர் ஜப்பானில் வடிவமைக்கப்பட்ட நினைவு தூண் ஒன்றை இங்கு நிறுவ உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஷோலின் கோயிலில் போதி தர்மர் பயிற்றுவித்த சீன தற்காப்புக் கலை, குங்பூ மற்றும் தியான வகுப்புகள் இம்மையத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றும் பற்பல ஆதாரங்களில் இதுவும் ஒன்று. இது ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் பதிந்து எழுச்சியுற்று முன்னேருவோமாக.
வாழ்க வளர்க உங்கள் pugazh!!!
சமீபத்தில் இந்திய தமிழ் இதழ் ஒன்றில் இன்டர்நெட் ஐ கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்று —ஒரு புலம்பல் ..அது மாதிரி இதுவும் ஒன்று ….தமிழ நாடு பிறவிகளுக்கு தமிழ் நாடு தான் உலகம் ..வெளியில் எதுவும் தெரியாது …ஒரு நடிகனுக்கு உலக நாயகன் என்று ஒரு பட்டம் வேறு ..எதோ இவரை ஐரோப்பா ..அமெரிக்க..ஆபிரிக்கா ..ஆஸ்திரேலியா நாடுகளில் எல்லோருக்கும் தெரிந்தது மாதிரி
ஐயா cholan (சோழனாக இருக்குமோ), ஏனையா தமிழ் மீதும் தமிழர் மீதும் இவ்வளவு வெறுப்பு? சமீபத்தில் ஒரு இக்கால தமிழர் ஒரு மின்சாரம் உருவாக்கும் கருவியை அமெரிக்காவில் உருவாக்கி புகழடைந்தாரே, தமிழர்கள் தான் அறிந்ததையும் தெரிந்ததையும், யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற கூற்றுக்கேற்ப மனிதர் அனைவரும் பயன் பெற பகிர்ந்துகொள்கின்றனர். அப்படி பகிரப்படுவது கால ஓட்டத்தில் நம்மால் மறக்கப்பட்டும் அதனை கற்றவரும் அதனின் மூலத்தை மறந்து அக்கலைகள் தம்முடையது என்று மார்த்தட்டிகொள்கின்றனர். ஆராய்ச்சி பலவற்றுக்குப்பின் அவைகளின் மூலத்தை கண்டு பிடித்து கூருங்கால் நேர்மையாளர் எற்றுகொல்வர் மற்றவர் நிராகரிப்பார். மேலும் நாமும் பழைய புகழினையே பாடிக்கொண்டிருக்க முடியாது. என்னுடைய தாத்தா பாட்டன் பூட்டன் பெருமயை பேசிக்கொண்டிருந்தால் இன்றைய நமது தேவைகள் பூர்தியாகபோவதில்லை. அவர்களைப்போல் நாமும் ஆக்காகரமாகவும், ஊக்கமுடனும், நேர்மையுடனும் செயல்படுவோம். நமது புகழ் இப்பொழுதும் எப்பொழுதும் வளர்ந்து நிலைக்கும். இப்பொழுது நமது திருக்குறளையும், யோகா உடற்ப்பயிற்சியையும் தமிழரல்லாதவர்கள் அநேகர் கற்று போதிக்கவும் செய்கிறார்கள். நாம் பழம் பெருமை பேசும்ம்போது நமது தன்னார்வமும் ஊக்கம் பெற்று நாமும் சாதனைகள் செய்ய ஊக்குவிக்க இறைவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.
நமது பெருமைகளில் இதுவும் ஒன்று. நமது பாரம்பரியம் தெரியாத-அறியாத ஜென்மங்களால் நமக்குப் பெரும் தலைக் குனிவை ஏற்படுத்துகின்றனர். இந்தத் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.
தமிழனுக்கு ஒரு உலக அங்கிகாரம்! நன்று!
தமிழ்நாட்டில் புத்தனும் இல்லை மதமும் இல்லை போதிதர்மன் தமிழன் எனவே இவருக்கு சிலை வைப்பது போற்றதக்கது புத்த சாயம் புசகுடாது இவர் தமிழன் அப்படி புத்த சாயம் பூசினால் அதை நன் இடிப்பான்
தமிழன் என்று சேருங்கள் மதத்தை கட்டி பிரியதிர்கள். ” அவன் தமிழன் என்று ஒருநாள் இந்த உலகம் போற்றும்..” மாற்ற நினைக்க வேண்டாம் மாற நினைப்போம். தமிழன் வாழ்க…….