ஊழல் அற்ற ஆட்சி அமுல்படுத்தப்படும்: டெல்லி முதல்வர்

kejriwal_003டெல்லியில், இனி ஊழல் அற்ற ஆட்சி நடைபெறும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல் உரையில் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

டெல்லி மாநிலத்தின் ஏழாவது முதல்வராக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் முதல் உரை ஆற்றிய முதல்வர் கெஜ்ரிவால், டெல்லியில் மக்கள் ஆட்சி அமைந்து விட்டது.

டெல்லியில் இனி அதிகாரிகள் ஆட்சி செலுத்த மாட்டார்கள் மக்கள் தான் ஆட்சி செலுத்துவார்கள். மக்கள் கைகளில் அதிகரத்தை அளிக்கவே இந்த போராட்டத்தை ஆம் அத்மி மேற்கொண்டது.

டெல்லியில் ஊழல் முற்றிலுமாக களையப்படும். ஊழலுக்கு எதிரான போராட்டம் மிகப் பெரியது. இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மக்கள் ஆதரவு வேண்டும். நாடு எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினைகளுக்கு கறை படிந்த அரசியல் தான் காரணம்.

ஆரம்பத்தில் அரசியலில் அடி எடுத்து வைக்க அண்ணா ஹசாரே எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவரிடம், அரசியல் நுழைந்தால் தான் அதில் இருக்கும் அசுத்ததை நீக்க முடியும் என்றேன். அதற்கேற்ப அரசியலை சுத்தப்படுத்துவோம் என்றார்.

மேலும், தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்றும், பெரிய கட்சிகள் கடைபிடிக்கும் அதிகார ஆட்சியை அப்புறப்படுத்தவே ஆம் ஆத்மி உதயமாகியுள்ளதால், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

TAGS: