புதுக்கோட்டை: இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு வருவதாகவும், இது வரை 100 க்கும் மேற்பட்டோர் இலங்கை சிறையில் வாடுவதாகவும் தமிழக மீனவ சங்க பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்து முறையிட்டனர். ஆனால் அடுத்த மறுநாளே 22 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களில் நாகை மற்றும் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலையில் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். இதில் கோட்டைப்பட்டனத்தை சேர்ந்தவர்கள் 19 பேர் 5 விசைப்படகுகள், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்தவர்கள்3 பேர், ஒரு விசைப்படகு. மீனவர்கள் மீன் பிடித்து கரை திரும்பி கொண்டிருந்தனர்.
இது குறித்து மீனவ சங்க பிரதிநிதிகள் கூறுகையில்: எங்கள் மீனவர்கள் எல்லை மீறி மீன் பிடித்ததாக இலங்கை தவறான தகவலை தருகிறது. நாங்கள் இந்திய எல்லைக்குள்தான் மீன் பிடித்து வருகிறோம். மீனவர்களை விடுவிக்க கோரி போராட்டம் நடத்தவுள்ளோம் என்றனர்.
ஏற்கனவே நாகை மீனவர்கள் தொடர்பாக நேற்று பிரதமரை தமிழக குழுவினர் சந்தித்தனர். ராமநாதபுரம் பகுதி மீனவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என மீனவ பிரதிநிதிகள் நாளை ( திங்கட்கிழமை) சந்திக்கவுள்ளனர். இந்நிலையில் 22 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது இப்பகுதியினர் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது வரை 100 க்கும் மேற்பட்டோர் இலங்கை சிறையில் வாடுவதாக கூறப்படுகிறது.
தனி தமிழர் நாடுஒன்றெ தீர்வு!