டெல்லியில் குடும்பம் ஒன்றிற்கு மாதத்திற்கு இலவசமாக 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் வசிக்கும் மக்களுக்கு இலவச குடிநீர் வழங்கும் திட்டம் குறித்து, முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் டெல்லி குடிநீர் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில், ஆம் ஆத்மி கட்சி தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, இலவச குடிநீர் வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
ஜனவரி 1ம் திகதி முதல் இலவச குடிநீர் வினியோகம் அமல்படுத்தப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
மாதத்திற்கு 20 ஆயிரம் லிட்டருக்கு மேல் பயன்படுத்தினால் விதிப்படி கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பலே ஆளையா நீர்..! எங்கள் நாட்டில் சிலாங்கூர் மாநிலத்தில் இதைத்தான் மாநில அரசும் செய்து இருக்கிறது வாழ்த்துக்கள். இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. ஏழை மாணவர்களுக்கு ஆரம்ப இலவச கல்வி , தொழிற்கல்வி , உயர்நிலை கல்வி மாணவர்களுக்கு மாநில கல்வி நிதி , கிராமங்களுக்கு சாலை வசதி , குடிநீர் , மின்சாரம் , மலிவு வீடு என சொல்லிக்கொண்டே போகலாம் படிப்படியாக செய்து வந்தால் அடுத்து நீங்கள்தான் நாட்டின் பிரதமர்..?